Skip to main content
பல நாள் நீடிக்கும் இருமல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

பல நாள் நீடிக்கும் இருமல் - பரவக்கூடியதா? ஆபத்தானதா?

வாசிப்புநேரம் -
சளி, காய்ச்சல், இருமல்..

எல்லாருக்கும் அவ்வப்போது வருவதுதான்.

சளியும் காய்ச்சலும் சில நாள்களில் குணமாகினாலும் ஒரு சிலருக்கு இருமல் சில வாரங்களுக்கு நீடிக்கும்.

இது போன்ற இருமல் பரவக்கூடியதா?

சிலருக்கு இருமல் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம்.

ஒரு சில நேரங்களில் அது 8 வாரங்கள் வரை கூடப் போகலாம்.

அது பரவும் என்ற அச்சம் சிலருக்கு இருக்கலாம்.

அப்படியில்லை என்கிறார் Pinnacle Family மருந்தகத்தை நிறுவிய டாக்டர் மொக் பூன் ருய் (Mok Boon Rui).

வழக்கமாக சளிக் காய்ச்சல் இருந்தால் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகச் சில நாள்களுக்கும் அறிகுறிகள் தெரிந்த பிறகு 3 -7 நாள்களுக்கும் மற்றவர்களுக்கு அது பரவக்கூடும் என்று டாக்டர் மொக் CNA ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார்.

பொதுவாக 7 நாள்களுக்குப் பிறகு அது மற்றவர்களுக்குத் தொற்றாது என்றார் அவர்.

ஆனால் இருமல் நீடிக்கலாம்.

குணமாகிவிட்டதாக நினைத்தாலும் சில நேரங்களில் சுவாசக் குழாய் முழுமையாகக் குணமடைந்திருக்காது.

அதனால் இருமல் நீடிக்கும் என்று டாக்டர் மொக் குறிப்பிட்டார்.

இது போன்ற இருமல் யாருக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது?

ஆஸ்துமா (Asthma)..

ஒவ்வாமை மூக்கு அழற்சி (Allergic rhinitis)..

GERD எனப்படும் வயிற்றுப் பிரச்சினை..

ஆகியவை உட்படச் சில நோய்களால் சுவாசக் குழாய்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கலாம்.

அப்படி இருக்கும்போது சிறு இரைச்சல் இருந்தாலும் அது சுவாசக் குழாயைப் பாதித்து இருமல் வரச்செய்யும் என்று கூறப்படுகிறது.

புகைபிடிப்பவர்களுக்கும் இருமல் நீண்டகாலம் நீடிக்கலாம்.

எப்போது மருத்துவரை நாட வேண்டும்?

மூச்சுத்திணறல்..

நெஞ்சு வலி..

இருமும்போது ரத்தம் வருவது..

எடை குறைதல்..

போன்றவை இருந்தால் மருத்துவரை உடனே பார்ப்பது சிறந்தது.

8 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அது தீரா இருமலாக வகை செய்யப்படுவதாக ஐரோப்பியச் சுவாசச் சங்கத்தின் வழிகாட்டிகள் கூறுகின்றன.

ஆனால் அதே நேரத்தில் நோயாளியின் மருத்துவ வரலாறு, அறிகுறிகள் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

விடாத இருமல் - வீரியத்தை எப்படிக் குறைக்கலாம்?

போதிய தண்ணீர் அருந்த வேண்டும்.

சர்க்கரை இல்லாத மிட்டாயை வாயில் வைத்திருப்பது உதவியாக இருக்கும். அந்தச் சாறை விழுங்கும்போது இருமல் வருவது குறையும்.

புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, தூசி, புகை ஆகியவற்றை நுகராமல் இருப்பது போன்றவையும் சில வழிகள்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்