Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமூக ஊடகத்தில் பிரபலமாகிவரும் 3 வயதுக் குழந்தையின் கலைப்படைப்புகள்

வாசிப்புநேரம் -
சமூக ஊடகத்தில் பிரபலமாகிவரும் 3 வயதுக் குழந்தையின் கலைப்படைப்புகள்

(படம்: Instagram/@laurents.art)

ஜெர்மனியைச் சேர்ந்த 3 வயதுக் குழந்தை வண்ணம் தீட்டிய ஓவியங்கள் சமூக ஊடகத்தில் பிரபலமாகி வருகின்றன.

லோரண்ட் ஷ்வார்ஸை (Laurent Schwarz) அனைவரும் சிறிய Picasso என்று அழைப்பதுண்டு.

விளையாட்டுப் பொருள்களுடன் விளையாடாத நேரத்தில் லோரண்ட் தூரிகைகளைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டுகிறார்.

சில சமயம் தமது விரல்களுக்கு வண்ணம் பூசி அதைப் பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்குவார்.

லோரண்ட்டின் ஓவியங்கள் கலைப் பிரியர்களிடையே பிரபலமாகியுள்ளன. அவை அதிக விலைக்கும் விற்கப்படுகின்றன.

சென்ற ஆண்டு விடுமுறைக்குச் சென்றபோது தாங்கள் தங்கிய ஹோட்டலில் கலைக்கூடம் இருந்ததாக லோரண்ட்டின் தாய் கூறினார். அப்போதுதான் வண்ணம் தீட்டுவதில் லோரண்ட்டுக்கு இருக்கும் ஆர்வத்தை அவரது பெற்றோர் உணர்ந்தனர்.

விடுமுறை முடிந்து வீட்டுக்குச் சென்றும் லோரண்ட் வண்ணம் தீட்டுவதை ஆர்வத்தோடு கடைப்பிடித்தார்.

லோரண்ட்டின் கலைப்படைப்புகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள அவரது பெற்றொர் Instagram கணக்கை ஆரம்பித்துவைத்துள்ளனர்.

 
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்