செண்டோல் ஜெல்லியை நூடல்ஸ் என்று எண்ணிச் சமைத்தவர் - விளக்கமளித்த இணையவாசிகள்

Tiktok/sora_fula
மலேசியப் பலகாரங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பச்சை நிற செண்டோல் ஜெல்லியை (cendol jelly) புது விதமாகச் சமைத்த இணையவாசி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
@sora_fula எனும் Tiktok பயனீட்டாளர் அதை நூடல்ஸைப் போல் சமைத்திருக்கிறார்!
மலேசியாவில் வசிக்கும் ஜப்பானியரான அவர் செண்டோலை 'மலேசிய நூடல்ஸ்' என்று காணொளியில் அழைக்கிறார்.
அது பச்சை நிறத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்.
அதைப் பின்னர் பூண்டு, சோயா சாஸ்,தண்ணீர் ஆகியவற்றுடன் சமைக்கிறார்...
செண்டோல் சூப்பில் மிதப்பதைக் காணொளியில் பார்க்கமுடிகிறது.
'நூடல்ஸை' ஆசை ஆசையாகச் சாப்பிடச் செல்லும் பயனீட்டாளரின் முகம் வாடுகிறது.
'நான் 'நூடல்ஸை' வெகு நேரம் வேகவைத்துவிட்டேனோ? மிகவும் மிருதுவாக இருக்கிறது' என்று அவர் புலம்புகிறார்.
பயனீட்டாளரின் தவற்றை எடுத்துரைக்க இணையவாசிகள் பலர் விரைந்தனர்.
இதுவரை 18,000 பேர் அது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அந்தக் காணொளி சுமார் 50,000 முறை பகிரப்பட்டுள்ளது.
செண்டோல் நூடல்ஸ் அல்ல ஜெல்லி என்று அவர்கள் கூறினர்.
'செண்டோல் இப்படி சமைக்கப்படுகிறது என்று என்னால் நம்பமுடியவில்லை' என்று சிலர் வருந்தினர்.
'செண்டோல் கோரேங் சமைக்கப்பட்டுள்ளது' என்றும் சிலர் வேடிக்கையாகக் கூறினர்.