Skip to main content
“நேரம் யாருக்காகவும் காத்திருக்காது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

“நேரம் யாருக்காகவும் காத்திருக்காது"- 33 ஆண்டுகள் உலகம் சுற்றிய வாலிபர்!

வாசிப்புநேரம் -
“நேரம் யாருக்காகவும் காத்திருக்காது"- 33 ஆண்டுகள் உலகம் சுற்றிய வாலிபர்!

Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

“நேரம் யாருக்காகவும் காத்திருக்காது.”

அதை வாழ்க்கையில் கடைப்பிடித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த 53 வயது சென் ஜின்வேய் (Chen Jinwei).

33 ஆண்டுகளில் 233 நாடுகள், மாநிலங்கள், வட்டாரங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்.

உலகப் பயணத்தை முடித்து அண்மையில் சீனாவின் ஜெஜியாங் (Zhejiang) மாநிலத்திலுள்ள சொந்த ஊரான ஜூஜிக்குத் (Zhuji) திரும்பினார்.

இயந்திர நிறுவனத்தை நடத்தும் அவர் பயணங்களுக்கு 10 மில்லியன் யுவான் (1.8 மில்லியன் வெள்ளி) செலவிட்டார் என்று South China Morning Post நாளேடு குறிப்பிட்டது.

1993ல் சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து ஆகிய நாடுகளிலிருந்து அவரது பயணம் தொடங்கியது.

தொழில், குடும்பம், பயணம் என அனைத்தையும் திரு சென் சமாளித்தார்.

ஒரு மாதம் வீட்டில்... மறுமாதம் சாலையில்...

சில பயணங்கள் எளிதாக அமையவில்லை.

2015ல் அண்டார்டிகா செல்ல முயன்றபோது கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதனால் பயணத்தைப் பாதியில் கைவிட்டார்.

2016ல் மீண்டும் சென்று இலக்கை அடைந்தார்.

ஆப்பிரிக்காவில் அவருக்கு மலேரியா கண்டது.

கிரீஸில் நிலநடுக்கத்தையும் எதிர்கொண்டார்.

நியூசிலந்தின் டோக்கெலாவ் (Tokelau) செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

2019ல் கோவிட் காரணமாக அந்தப் பயணம் ரத்தானது.

இந்த ஆண்டு மீண்டும் முயன்று அங்கும் கால்பதித்தார்.

“பிரச்சினை வந்தால் முதலில் அமைதியாக இருங்கள். பின்னர் தீர்வை யோசியுங்கள்,” என்கிறார் திரு சென்.

உலகைச் சுற்ற விரும்புவோருக்கு அவரது அறிவுரை?

“காத்திருக்காதீர்கள். நேரம் யாருக்காகவும் காத்திருக்காது.”

இனி பிள்ளைகள், பெற்றோருடன் அதிக நேரம் செலவிட அவர் திட்டமிடுகிறார்.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்