Skip to main content
சின்னஞ்சிறு டைனசரின் பிஞ்சுப் பாதங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

சின்னஞ்சிறு டைனசரின் பிஞ்சுப் பாதங்கள் - சீனாவில் கண்டுபிடிப்பு

வாசிப்புநேரம் -
சின்னஞ்சிறு டைனசரின் பிஞ்சுப் பாதங்கள் - சீனாவில் கண்டுபிடிப்பு
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவின் கான்சூ (Gansu) மாநிலத்தில் டைனசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக South China Morning Post தெரிவித்தது.

பறவைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அந்தக் கண்டுபிடிப்பு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

'Minisauripus' எனும் ஆகச்சிறிய டைனசர்களுக்கு அந்தக் கால்தடங்கள் சொந்தமானவை என்று கூறப்படுகிறது. கோழிகளைவிட அவை சிறியவை என்று நம்பப்படுகிறது.

அந்த டைனசரின் நீளம் சுமார் 25 செண்டிமீட்டர் என்று ஆய்வாளர்களால் அளவிடப்பட்டது.

லின்சியா (Linxia) UNESCO புவியியல் பூங்காவில் டைனசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடர்ந்து பெய்த மழையில் பாறை மேற்பரப்பு மீது கால் தடங்கள் காணப்பட்டதாக South China Morning Post தெரிவித்தது.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்