Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

டைட்டானிக் கப்பலில் எழுதப்பட்ட அஞ்சல் அட்டை ஏலத்தில் விற்பனை

வாசிப்புநேரம் -
டைடானிக் கப்பலில் பயணம் செய்தவர் எழுதிய அஞ்சல் அட்டை இம்மாதம் (நவம்பர் 2024) ஏலத்தில் விற்கப்படவிருக்கிறது.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதியன்று பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் திரு ரிச்சர்ட் வில்லியம் ஸ்மித் (Richard William Smith), அதை இங்கிலாந்தைச் சேர்ந்த திருவாட்டி ஒலிவ் டாக்கினுக்கு (Olive Dakin) எழுதினார்.

கப்பல் விபத்தைச் சந்தித்ததற்கு 3 நாள் முன்பு அந்த அட்டை எழுதப்பட்டது.

விபத்தில் மாண்ட சுமார் 1,500 பேரில் ஸ்மித்தும் ஒருவர்.

அவர் கடைசியாய் எழுதிய கடிதமாக அஞ்சல் அட்டை கருதப்படுகிறது.

ஸ்மித் தமது தோழி திருவாட்டி நிக்கல்ஸுடன் (Nicholls) டைட்டானிக்கில் பயணம் செய்தார். திருவாட்டி நிக்கல்ஸ் பாதி தூரம் மட்டும் பயணம் செய்ததால் அவரிடம் திரு ஸ்மித், அஞ்சல் அட்டையைத் தந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அஞ்சல் அட்டை 10,000 பவுண்டுக்கு (சுமார் 17,000 சிங்கப்பூர் வெள்ளி) விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்