Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீல வானம்... ஊதா நிறமானது தோ பாயோவில்!

வாசிப்புநேரம் -
நீல வானம்... ஊதா நிறமானது தோ பாயோவில்!

Photo: Facebook/Myke Muk KC

அதிகாலைப் பரபரப்பில் ரயில் நிலையம் நோக்கிச் சென்ற ஒருவர் கண்ணில் பட்டது அதிசயம்...

வழக்கமாக நீல நிறத்தில் காட்சியளிக்கும் வானத்தை ஊதா நிறத்தில் கண்டார்.

உடனே படமெடுத்து தான் கண்ட அதிசயத்தை Facebook ஊடகம் வாயிலாக கடந்த வெள்ளிக்கிழமை (29 மே) உலகுக்கு பகிர்ந்தார்.

ஒரு பெரிய மேகம் வானத்தில் பாதியை மூடியவாறு உள்ளது. மீதமிருக்கும் வானம் ஊதா நிற சாயம் பூசப்பட்டது போல இருந்தது. அதன் நடுவே அழகான ஒரு பிறை நிலவு ஒளிர்ந்துகொண்டிருந்தது.

படமெடுத்தவருக்கு அங்கேயே இருந்து வானை ரசிக்க ஆசை. இருப்பினும் வேலை அழைக்கிறதே என்று மனமில்லாமல் சென்றதாக அவரது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாய மாளிகையின் வாயில் போன்று தோற்றமளிப்பதாகக் கூறினர் பல இணையவாசிகள்.

அறிவியல் கூற்றுப்படி சூரிய உதயம் அல்லது மறைவின் போது வானில் நிறச் சிதறல்கள் ஏற்படும். அப்போது இத்தகைய நிற மாறுதல்கள் ஏற்படும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa