சிறுவர்களுக்கு இரவுக் கேளிக்கைக் கூடம்?
Instagram/columbus.moms.guide
This audio is generated by an AI tool.
பெரியவர்களுக்கான இரவுநேரக் கேளிக்கைக் கூடங்கள்... இப்போது சிறுவர்களுக்கும்.
Toddler Rave என்று அது அழைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த DJ லென்னி பியர்ஸ் (Lenny Pearce) அந்த நிகழ்ச்சியை உலகெங்கும் நடத்துகிறார்.
நிகழ்ச்சியின்போது "Wheels on the Bus", "Bingo" எனப் பல பிரபலமான சிறுவர் பாடல்களை மின்னியல் நடன இசையுடன் (electronic dance music) திரு பியர்ஸ் கலக்குகிறார்.
பின்னர் அந்த இசை அரங்கத்தில் அதிர்கிறது.
வண்ணவண்ண நியான் (neon) விளக்குகள் மின்னுகின்றன.
மதுபானத்துக்குப் பதிலாக ஆப்பிள் சாறு வழங்கப்படுகிறது.
ஆனால் இரவு முழுவதும் நிகழ்ச்சி நடப்பதற்குப் பதிலாக இரவு 10 மணியுடன் முடிவடைகிறது.
அண்மையில் திரு பியர்ஸ் Toddler Rave நிகழ்ச்சியை அமெரிக்காவின் பால்ட்டிமோர் (Baltimore) நகரில் நடத்தினார். அதன் காணொளிகள் இணையத்தில் பரவின.
அங்கிருந்து நியூயார்க், சிக்காகோ (Chicago), லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) ஆகிய நகரங்களிலும் அவர் நிகழ்ச்சியை அரங்கேற்றுவார்.
Toddler Rave நிகழ்ச்சிக்குச் சிறுவர்களைவிட பெற்றோரிடமிருந்தே வரவேற்பு குவிகிறது.
குழந்தை பிறந்த பிறகும் கேளிக்கை நடவடிக்கைகளில் பங்கெடுக்கலாம் என்பதை Toddler Rave எடுத்துக்காட்டுவதாகக் காணொளியை Instagramஇல் பதிவிட்ட ஒருவர் பகிர்ந்தார்.
சிறுவர்களைவிட பெற்றோருக்குத்தான் இந்த நிகழ்ச்சி முக்கியம் என்றும் சிலர் பதிவிட்டனர்.
குழந்தை இல்லாதவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாமா என்று சிலர் நகைச்சுவையாகக் கேட்டனர்.