Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தவ்வு (tofu) உடலுக்கு நல்லதா?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சைவ அல்லது வீகன் (Vegan) உணவுவகைகளில் கட்டாயமாக இடம்பெறக்கூடிய ஒன்று தவ்வு (tofu).

இந்திய உணவில் தவ்வு சம்பால் என்றாலே நாவூறும்...

அது தாவர வகைப் புரதச்சத்துக்கும் பெயர்பெற்றது. அது குறித்து The New York Times செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஊட்டச்சத்து
சுமார் 85 கிராம் தவ்வில்...
  • சமைக்கப்படும் விதத்தைப் பொறுத்து 4 கிராமுக்கும் 14 கிராமுக்கும் இடைப்பட்ட புரதச்சத்து
  • உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் 9 அமினோ அமிலங்கள்(Amino Acids)
  • வைட்டமின் ‘B’
  • ஆரோக்கியமான கொழுப்பு அமிலம்
  • இரும்பு,மெக்னீஷியம் (magnesium), ஸிங்க் (zinc) எனப்படும் துத்தநாகம் ஆகிய கனிமங்கள்

மனிதர்களிடம் உள்ள ஈஸ்ட்ரோஜன் (estrogen) எனும் சுரப்பியைப் போல் செயல்படக்கூடிய isoflavonesஉம் தவ்வில் உள்ளது.

அதைச் சாப்பிடுவதால் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும் என்றும் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும் என்றும் சிலர் கவலைப்படுகின்றனர்.

உண்மையா?

சோயா மொச்சை உணவுவகைகளைச் சாப்பிடும் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் அவ்வளவாக அதிகரிப்பதில்லை என்று பல ஆய்வுகள் காட்டியுள்ளதாக Vanderbilt பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் தொற்றுநோயியல் (epidemiology) பேராசிரியர் Shu Xiao-Ou சொன்னார்.

சாப்பாட்டில் சோயா மொச்சை உணவுவகைகளைச் சேர்ப்பது பாதுகாப்பானது என்றும் Harvard பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பள்ளியில் ஊட்டச்சத்து, தொற்றுநோயியல் (epidemiology) பிரிவின் துணைப் பேராசிரியர் டாக்டர் சி சுன் (Qi Sun) கூறினார்.

மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களிடம் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயம் குறைவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன.

தவ்வில் உள்ள isoflavones இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுவதாக டாக்டர் சுன் சொன்னார். குறிப்பாகத் தவ்வைச் சாப்பிடும்போது இருதய நோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஓர் ஆய்வு காட்டுவதாக அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்