Skip to main content
பேய்களுடன் ஓர் இரவு... Halloween
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

பேய்களுடன் ஓர் இரவு... Halloween-இல் புதிய திகில் அனுபவம்!

வாசிப்புநேரம் -
பேய்களுடன் ஓர் இரவு... Halloween-இல் புதிய திகில் அனுபவம்!

படம்: AP Photo/Mike Householder

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பேய்களைப் போல் வேடமிட்டவர்களைப் பார்த்துப் பயப்படுவது பழைய பாணி!

இப்போது உண்மையான பேய்களைத் தேடிச் செல்கின்றனர் சில ஹாலோவீன் (Halloween) ஆர்வலர்கள்!

அமெரிக்காவில் முன்னாள் மனநல மருத்துவமனையும் ஈமச்சடங்கு நிலையமும் திகில் சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன.

மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள எலோய்ஸ் அசைலம் (Eloise Asylum) மருத்துவமனையில் பேய்கள் நடமாடுவதாக நம்பப்படுகிறது.

அங்குச் செல்லும் சிலர் தங்களை யாரோ தொடுவது, பிடித்து இழுப்பது, விசில் சத்தம் கேட்பது போன்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளதாகச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பேய்களைக் கண்டறியும் கருவிகளுடன் அங்குச் சுற்றிப்பார்க்கலாம்.

துணிச்சல் இருந்தால் இரவும் தங்கலாம்!

ஒஹாயோ (Ohio) மாநிலத்தில் உள்ள முன்னாள் ஈமச்சடங்கு நிலையத்திலும் இதே அனுபவம் காத்திருக்கிறது.

அங்கு உடல்களைப் பதப்படுத்தும் அறை, பிரேதப் பரிசோதனை அறை ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

சவப்பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து திகில் படமும் பார்க்கலாம்!

ஆனால் நோயாளிகள் துன்பப்பட்ட இடத்தைப் பொழுதுபோக்கிற்குப் பயன்படுத்துவதைச் சிலர் கண்டித்தனர்.

பயத்தைப் போக்கப் பொழுதுபோக்குத் தேடுபவர்கள் ஒருபுறம்...

பயத்தையே பொழுதுபோக்காகத் தேடுபவர்கள் மறுபுறம்!
ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்