Skip to main content
வீடா, விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடையா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

வீடா, விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடையா?

வாசிப்புநேரம் -
வீடா, விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடையா?
(படம்: Jean Kuah)

சிங்கப்பூரில் உள்ள வீடு ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வீட்டைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

எங்கும் விளையாட்டுப் பொருள்கள்..

வீடா, விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடையா என்ற சந்தேகம் பல இணையவாசிகளுக்கு எழுந்தது.

வீட்டின் உரிமையாளர்களான திருமதி ஜீன் குவாவும் (Jean Kuah) திரு எய்டன் லியாவும் (Aiden Liow) Mochi Buddies எனும் பெயரில் பைகள், ஒட்டுவில்லைகள், பொம்மைகள் போன்றவற்றை உருவாக்கி விற்பனை செய்கின்றனர்.

அவற்றைத் திருமதி குவா வடிவமைப்பார்.

அவர் வரைவதைப்போல் அவர்களுடைய வீடும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சிறு வயதிலிருந்தே விளையாட்டுப் பொருள்களைச் சேகரிப்பதில் அதிக நாட்டம் இருந்ததாய்த் திருமதி குவா CNA ஊடகத்திடம் கூறினார்.

திருமதி குவா - திரு லியாவ் தம்பதி வீட்டிற்கான சாவியைச் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பெற்றனர்.

மகிழ்ச்சியான இல்லத்தை உருவாக்குவது இருவரின் இலக்காக இருந்தது.

அவர்களுடைய வீட்டைப் பார்த்து இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர் வீடு அழகாக இருப்பதாகக் கூறினர்.

பொருள்களால் தூசி சேரும் என்று சில குறிப்பிட்டனர்.

"வேலைக்குப் போனால் மனவுளைச்சல், வீட்டிற்கு வந்தால் இன்னும் கூடுதல் மனவுளைச்சல்" என்று இணையவாசி ஒருவர் கூறினார்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்