Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

விளையாட்டாக ரயில் ஏறிய சிறுவர்... 35 ஆண்டுக்குப் பிறகு திரும்பி வந்தார்

வாசிப்புநேரம் -
விளையாட்டாக ரயில் ஏறிய சிறுவர்... 35 ஆண்டுக்குப் பிறகு திரும்பி வந்தார்

envato elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

விளையாட்டாக ரயிலில் ஏறிய சிறுவர்...

எதிர்பாராத விதமாக வீட்டைவிட்டுப் பிரிந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் சீனாவில் பலரை நெகிழ வைத்துள்ளது.

மத்திய சீனாவின் ஹெனான் (Henan) மாநிலத்தைச் சேர்ந்த லெய் செகிங் (Lei Zeqing) காது கேளாதவர். பேசவும் முடியாது.

1991ஆம் ஆண்டு நண்பர்களுடன் விளையாட்டாக ரயிலில் ஏறிய அவர் இருக்கைக்குக் கீழே தூங்கிவிட்டார்.

கண்விழித்தபோது ஷென்சென் (Shenzhen) நகரை அடைந்திருந்தார்.

பேச முடியாததால் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள இயலவில்லை.

ரயில் நிலையம் அருகே வீடற்றவராக வாழத் தொடங்கினார்.

அங்கிருந்த பெண் ஒருவர் அவருக்கு எழுதக் கற்றுக்கொடுத்தார்.

பின்னர், உணவக உரிமையாளர் ஹோங் கிங்சியானும் (Hong Qingxian) அவரது மனைவியும் லெய்க்கு உணவு, தங்குமிடம், வேலை என அனைத்தையும் ஏற்பாடு செய்தனர்.

30 ஆண்டுக்கும் மேலாகத் தங்கள் மகனைப் போல் கவனித்தனர்.

இருப்பினும் தனது குடும்பத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியை லெய் ஒருபோதும் கைவிடவில்லை.

அவரது அண்ணனும் காது கேளாதவராக இருப்பதால் செயலி ஒன்றில் பகிரப்பட்ட தகவலைக் கண்டார்.

லெய் தனது பெயரை தலைகீழாக எழுதும் சிறுவயது பழக்கத்தைப் பயன்படுத்தியிருந்தது அவர் தனது தம்பிதான் என்பதை அண்ணனுக்கு உறுதிப்படுத்தியது.

மேலும் உறுதிசெய்ய மரபணுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஷென்செனுக்கு வந்து லெய்யைச் சந்தித்த அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அவரைத் தங்கள் மகனைப் போல வளர்த்த ஹோங் தம்பதியருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்