வீட்டுக்குள் ஒரு ‘நியூயார்க்’... 800,000 கட்டடங்கள்!
வாசிப்புநேரம் -
படம்: AP Photo/Seth Wenig
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வுநேரத்தில் நியூயார்க் (New York) நகரையே சிறிய வடிவில் உருவாக்கியுள்ளார் லாரி ஓட்டுநர் ஜோ மேக்கன் (Joe Macken).
800,000க்கும் அதிகமான கட்டடங்களைக் கொண்ட அவரது படைப்பு சுமார் 15 மீட்டர் நீளமும் 9 மீட்டர் அகலமும் கொண்டது.
சுதந்திர தேவி சிலை, புரூக்ளின் பாலம், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் என நகரின் முக்கிய அடையாளங்களும் அதில் உள்ளன.
திரு மேக்கனின் மகள் படைப்பைக் காணொளியாக டிக்டாக்கில் (TikTok) பதிவிட ஊக்குவித்தார்.
ஒரே வாரத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர்
காணொளிகளைப் பார்த்தனர்.
அதைக் கண்ட நியூயார்க் நகர அருங்காட்சியகம் அவரது ‘குட்டி நகரத்தை’ காட்சிக்கு வைத்துள்ளது.
“அதை உருவாக்குவது மிகவும் பிடித்திருந்ததால் எப்போது முடிப்பது என்று நினைத்ததே இல்லை,” என்றார் திரு மேக்கன்.
கண்காட்சி முடிந்த பிறகும் வேலை நிற்கப்போவதில்லை.
மேலும் 50க்கும் அதிகமான கட்டடங்களைச் சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆதாரம் : AP