பிரபல சொல்லிசைக் கலைஞரின் மோதிரம்... ஒரு மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை
வாசிப்புநேரம் -

(படம்: Ed JONES / AFP)
பிரபல சொல்லிசைக் கலைஞர் டூபக் ஷகுரின் (Tupac Shakur) மோதிரம் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
அது எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டதாக அதை ஏலத்திற்கு விட்ட Sotheby's நிறுவனம் சொன்னது.
1996ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அவர் கடைசியாக மக்களைச் சந்தித்தபோது மாணிக்கம், வைரம் பதித்த மகுடம் போன்று தோற்றமளிக்கும் அந்தத் தங்க மோதிரத்தை அணிந்திருந்தார்.
சில நாள்கள் கழித்து செப்டம்பர் 13ஆம் தேதி அவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது அவருக்கு 25 வயது.
ஷகுர் அந்த மோதிரத்தை வடிவமைக்க சில மாதங்கள் எடுத்துக்கொண்டதாக Sotheby's குறிப்பிட்டது.
அவர் ஆகச் சிறந்த சொல்லிசைக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறது.
அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பது இன்று வரை தெரியவில்லை.
-AFP