Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆஸ்திரேலியாவில் கடலில் விடுவிக்கப்பட்ட 100 கடல் ஆமைக் குஞ்சுகள்

வாசிப்புநேரம் -
அருகிவரும் இனத்தைச் சேர்ந்த சுமார் 100 கடல் ஆமைக் குஞ்சுகள் ஆஸ்திரேலியாவில் மீண்டும் கடலில் விடுவிக்கப்பட்டுள்ளன.

அவை தத்தித் தத்தி ஆவலோடு கடலைச் சென்றடைந்தன.

சிட்னிக்கு வடக்கிலுள்ளது ஷெல்லி (Shelly) கடற்கரை.

அங்கே தாய் ஆமைகள் இட்ட முட்டைகள் பொரியப் பொருத்தமான தட்ப வெப்பம் அவசியம்.

முட்டையிலிருந்து குஞ்சுகள் ஆபத்தின்றி வெளிவரத் தோதான வெப்பம் இல்லை.

எனவே சென்ற மாதக் கடைசியில், 130 முட்டைகளை மணலில் இருந்து தோண்டி எடுத்தனர் தொண்டூழியர்கள்.

முட்டைகள் அருகிலுள்ள விலங்குத் தோட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடைகாப்புப் பெட்டியில் வைக்கப்பட்டன.

ஓட்டை உடைத்துக்கொண்டு ஆரோக்கியமாக வெளிவந்தன சுமார் 100 ஆமைக் குஞ்சுகள்.

பத்திரமாக அவற்றைப் பெட்டியில் எடுத்துவந்து கடற்கரையில் விடுவித்தனர் தொண்டூழியர்கள்.

புதுவீட்டைக் கண்ட களிப்பில், வழக்கத்துக்கு மாறாக விரைந்து சென்றன ஆமைக் குஞ்சுகள்.

புகுந்த வீட்டுக்குச் செல்லும் புதுமணப் பெண்ணைப் பிரிவதுபோல் நெகிழ்ந்து நின்றனர் தொண்டூழியர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்