Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஓரக்கண்ணால் பார்க்கும் "உளவுத்துறை அதிகாரி", "மலை மனிதர்", "ஓய்வுபெற்ற ஒலிம்பிக் வீரர்" -- MRT பயணங்களில் எரிச்சலூட்டும் பயணிகள்... எப்படிச் சமாளிப்பது?

வாசிப்புநேரம் -
ஓரக்கண்ணால் பார்க்கும் "உளவுத்துறை அதிகாரி", "மலை மனிதர்", "ஓய்வுபெற்ற ஒலிம்பிக் வீரர்" -- MRT பயணங்களில் எரிச்சலூட்டும் பயணிகள்... எப்படிச் சமாளிப்பது?

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

MRT ரயில் பயணங்களில் தனிநபர் மட்டும் பயணியல்ல; சமூகமே ஒன்றாகப் பயணம் செய்யவேண்டிய நிலை உண்டு. 

இத்தகைய நிலையில் குறிப்பிட்ட சில பயணிகளின் நடவடிக்கைகள் நமக்கு எரிச்சலூட்டலாம்!

"வேண்டாமப்பா இந்த ரயில் பயணம் என்றெல்லாம் எண்ணத் தூண்டலாம்..."

யார் அந்தப் பயணிகள்?... 

1. ஓரக்கண்ணால் பார்க்கும் "உளவுத்துறை அதிகாரி"

நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகம், கைத்தொலைபேசி... என்னவெல்லாம் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் ஓரக்கண்ணால் ரகசியமாக நோட்டமிடுவார்! 

எப்படிச் சமாளிப்பது? 

Privacy screen protector எனும் ஒட்டுவில்லையைக்  கைத்தொலைபேசியின்  திரையில் ஒட்டிவைக்கலாம் - பக்கத்தில் உள்ளவர்களால் இனி அதைப் பார்க்கமுடியாமல் மறைத்துவிடும்.

2. குழந்தைச் சாகச வீரர்

MRT ரயிலில் இருக்கும் கைப்பிடிக் கம்பங்களில் தொங்கிக்கொண்டு பாய்ந்து பாய்ந்து செல்லும் பிள்ளைகளை நீங்கள் பார்த்ததுண்டா? 

அவர்கள் போடும் சத்தம் ஒரு புறமிருக்க, ஆபத்தான வழியில் பாய்வதால் அவர்களுக்கும் பிறருக்கும் காயம்கூட ஏற்படலாம்!

எப்படிச் சமாளிப்பது?

 அவர்களது பெற்றோரிடம் அமைதியாக இருக்கும்படிச் செய்யக் கேட்கலாம். 

3. நகரும் வானொலிப் படைப்பாளர்

கையில் கைத்தொலைபேசி - அதில் Spotify பட்டியல். கைத்தொலைபேசியே கதறும் அளவுக்குச் சத்தமாக இசையைத் திறந்துவைத்து ரயிலில் பயணம் செய்பவர்கள் இவர்கள்!

எப்படிச் சமாளிப்பது?

அவர்களிடம் புகார் செய்வதில் பயனில்லை. நீங்கள் சத்தத்தைக் குறைக்கும் காதொலிக் கருவிகளை (Noise-cancelling earphones) வாங்கிப் பயன்படுத்தலாம்.

4. ஓய்வுபெற்ற ஒலிம்பிக் வீரர்

பொதுப் போக்குவரத்தில் முதியவர்களுக்கு அமர இடம் தருவது நல்லதுதான்... 

ஆனால் ஒரு சில முதியவர்கள் பிறருடன் போட்டியிட்டு அவர்களைத் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு இருக்கையில் அமர முயற்சி எடுப்பதை MRT ரயில்களில் காணலாம். 

எப்படிச் சமாளிப்பது?

முதியவர்களைக் கண்டவுடனே வழிவிடுங்கள். இதுவே சிறந்த முடிவு. 

5. மலை மனிதர்

MRT ரயிலில் நின்றால் நகரவே மாட்டார்கள் ஒரு சிலர். அவர்கள் ரயிலின் நடுப்பகுதிக்குள் சென்று பிறருக்கு இடங்கொடுக்காமல் இடத்தைத் தேவையின்றிப் பிடித்துவைத்துக்கொள்வர். 

எப்படிச் சமாளிப்பது?

இரண்டு ஆங்கில வார்த்தைகள் : "Excuse me", ஒரே புன்னகை. இது போதும், நீங்கள் உள்ளே நடந்துசென்று அவர்கள் நிற்கவேண்டிய இடத்தில் நிற்கலாம். 

ஆதாரம் : CNA/CNA/ic(ta)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்