அளவுக்கு அதிகமாய்ப் பதப்படுத்தப்பட்ட உணவு பெருந்தீங்கு
வாசிப்புநேரம் -
அளவுக்கு அதிகமாய்ப் பதப்படுத்தப்பட்ட உணவு (Ultra-processed food) உலக மக்களுக்குப் பெருந்தீங்கு என்று லான்செட் (Lancet) மருத்துவச் சஞ்சிகை எச்சரித்திருக்கிறது.
உடனடி நடவடிக்கை தேவை என்று அது அறைகூவல் விடுத்தது.
சஞ்சிகையின் புதிய கட்டுரைத் தொடரை 43 உலக நிபுணர்கள் வரைந்துள்ளனர்.
UPF என்கிற அளவுக்கு அதிகமாய்ப் பதப்படுத்துதல் எனும் சொல் 15 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டது.
அந்தச் சொல்லை உருவாக்கிய பிரேசில் பேராசிரியர் கார்லோஸ் மொன்டீரோ (Carlos Monteiro), உலகம் உடனே செயல்பட வேண்டிய நேரம் இது என்றார்.
அளவுக்கு அதிகமாய்ப் பதப்படுத்தப்பட்ட உணவில் உண்மையான, சத்தான பொருள்கள் மிகவும் குறைவு.
அதிக அளவு இனிப்பு கொண்ட சுவைபானங்கள், திடீர் நூடல்ஸ் (instant noodles) அதில் அடங்கும்.
உடல்பருமன் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களுடன் UPF உணவுவகைகள் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் உலகெங்கும் அத்தகைய உணவை உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.
எதனால், எப்படி UPF உடல்நலக் குறைவை ஏற்படுத்துகின்றன என்பது தெரியவில்லை.
ஆனால் அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கப் போதுமான ஆதாரம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆதாரம் : Others