Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இந்தக் கீரையைச் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள சிசு முகம் சுளிக்குமாம்...

வாசிப்புநேரம் -

பொதுவாகக் கர்ப்பிணிகள் தங்களுக்குப் பிடித்தவற்றை அதிகம் சாப்பிடுவது வழக்கம்.

ஆனால் வயிற்றில் உள்ள சிசுவுக்கு எல்லா உணவு வகையும் பிடிக்குமா?

இல்லை என்கிறது ஒரு புதிய ஆய்வு.

கேல் வகை கீரையைக் கர்ப்பிணிகள் உட்கொள்ளும்போது வயிற்றில் உள்ள சிசுவின் முக பாவனை அழுவதுபோன்று மாறுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுமார் 70 கர்ப்பிணிகள் பங்கேற்றதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

அவர்களில் சிலருக்குக் கேல் கீரை தூளும் மற்றவர்களுக்கு கேரட் தூளும் உட்கொள்ளக் கொடுக்கப்பட்டது. 

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, அவர்களுக்கு ultrasound scan செய்யப்பட்டதாக The Guardian குறிப்பிட்டது.

கேரட் தூள் உட்கொண்ட கர்ப்பிணிகளைக் காட்டிலும் கேல் கீரை தூளை உட்கொண்ட கர்ப்பிணிகளின் சிசுக்கள் ஒரு மடங்கு அதிகமான முறை அழுவது போன்று காட்சியளித்ததாக ஸ்கேன் முடிவுகளில் தெரிய வந்தது.

தாய் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை அல்லது தாய் என்ன சாப்பிட்டார் என்பதைச் சிசுக்களால் உணர முடிகிறது என்பதை அது காட்டுவதாக ஆய்வை வழிநடத்திய ஒருவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa