Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மலேசிய வெள்ளம்: தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பிறர் நலம் காக்க முயன்ற ஆடவர்

வாசிப்புநேரம் -
மலேசிய வெள்ளம்: தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பிறர் நலம் காக்க முயன்ற ஆடவர்

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: TikTok / Zurainiswarno)

மலேசியாவின் வெள்ளப்பேரிடர் பலரது வாழ்க்கையைத் திசை மாற்றியுள்ளது.

6 பேர் மாண்டதாகவும் 45,000க்கும் மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

வெள்ளப்பேரிடரால் வீடுகளை இழந்த மக்களில் சிலர் பள்ளிக்கூடத்தில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

அந்தத் தர்மசங்கடமான நிலையில் அபாங் சலே (Abang Salleh) என்பவர் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடிவெடுத்தார்.

தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பிறர் நலம் காக்க முயன்ற அவரின் செயல் பல இணையவாசிகளை நெகிழ வைத்தது.

ஒரு கையில் கயிற்றைப் பிடித்தவாறு இன்னொரு கையில் உணவுப் பொட்டலங்களை வாங்கி மறுபுறத்தில் இருந்த பள்ளிக்கூடத்திற்கு அவற்றைக் கொடுக்க அபாங் முயன்றார்.

வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் அவரது முயற்சி கைகொடுத்ததா இல்லையா என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஜொகூர் மாநிலத்தில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளி சமூக ஊடகத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதுவரை 2.1 மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்