கழிப்பறையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துகிறீர்களா? அபாயம்!
வாசிப்புநேரம் -
Unsplash
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கைத்தொலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டே கழிப்பறையில் வெகுநேரம் செலவிடுவோருக்கு எச்சரிக்கை....
மூலநோய் ஏற்படும் சாத்தியம் அதிகமாவதாக PLOS One சஞ்சிகையில் வெளியான ஆய்வு காட்டுகிறது.
அமெரிக்காவின் போஸ்ட்டன் (Boston) நகரில் பெருங்குடல் சோதனை மேற்கொண்ட 125 பெரியவர்களிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
பங்கேற்பாளர்களில் 66 விழுக்காட்டினர் கழிப்பறையில் அடிக்கடி கைத்தொலைபேசி பயன்படுத்துவதாகக் கூறினர்.
கழிப்பறைக்குக் கைத்தொலைபேசியைக் கொண்டு செல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது கழிப்பறையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவோருக்கு மூலநோய் ஏற்படும் சாத்தியம் 46 விழுக்காடு அதிகம் என்று தெரியவந்தது.
பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் மூலநோயால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டனர்.
கழிப்பறைத் தொட்டி மீது வெகுநேரம் உட்காரும்போது ஆசனவாய்ப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அது வீக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் மூலநோய்க்குக் காரணமாகலாம் என்றும் ஆய்வாளர்கள் CNN ஊடகத்திடம் கூறினர்.
எனவே கழிப்பறையில் வெகுநேரம் செலவிடாமல் இருப்பதற்குக் கைத்தொலைபெசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆதாரம் : Others