மின்-சிகரெட் என்ன செய்யும்? - சில தவறான கருத்துகள்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் மின்-சிகரெட் புழக்கம் அதிகரித்து வருகிறது.
அதைப் பற்றிய தவறான கருத்துகளை மக்கள் நம்பிவருகின்றனர்.
அந்தக் கருத்துகள் தவறு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
பொதுவாகப் பரவி வரும் சில தவறான கருத்துகள்.
#1: மின்-சிகரெட்டு சாதாரணச் சிகரெட்டை விடப் பாதுகாப்பானது
இப்படி ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மை என்ன? மின்-சிகரெட்டும் சாதாரணச் சிகரெட்டும் உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும். ஒன்று மற்றொன்றைவிடப் பாதுகாப்பானது அல்ல. இரண்டிலும் நிக்கொட்டின் (nicotine) எனும் ஆபத்தான ரசாயனம் கலந்திருக்கிறது.
#2: புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட மின்-சிகரெட்டு உதவி புரியும்
இப்படி ஒரு கருத்து உண்டு. இந்தக் கருத்து உண்மை என்று நிரூபிக்க ஆதாரம் இல்லை. சில ஆய்வுகளில் மின்-சிகரெட்டைப் பயன்படுத்துபவர்களில் 80 விழுக்காட்டினர் மீண்டும் சிகரெட்டு பழக்கத்துக்கு அடிமையாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
#3: மின்-சிகரெட் புகைத்தால் சுற்றியுள்ளவர்களுக்குப் பாதிப்பு இல்லை
இதுவும் பொய். சிகரெட்டைப் புகைக்கும்போது வரும் புகையைச் சுற்றியுள்ளவர்கள் சுவாசிக்கும்போது அவர்களுக்கு நுரையீரல் பிரச்சினைகள் வரக்கூடும். மின்-சிகரெட்டில் அத்தகைய புகை வெளியேற்றப்படாது.
ஆனால் மின்-சிகரெட் புகைக்கும்போது நறுமணம் கொடுக்கக்கூடிய ஏரோசொல் (aerosol) வெளியேற்றப்படும்.
அது சுற்றியுள்ளவர்களைப் பாதிக்கும். நுரையீரல்களில் சேதம் ஏற்படலாம்.