Skip to main content
பட்டுப்புடவைகளில் சைவம், அசைவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

பட்டுப்புடவைகளில் சைவம், அசைவம் - தெரியுமா?

வாசிப்புநேரம் -
பட்டுப்புடவைகளில் சைவம், அசைவம் - தெரியுமா?

படம்: srijeyamsaree.myshopify.com

வெளியீடு : 23 Sep 2024 05:26PM புதுப்பிப்பு : 23 Sep 2024 07:08PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பெண்கள் பட்டுப்புடவைகள் மீது கொண்டுள்ள மோகம் காலங்காலமாக இருந்துவரும் ஒன்று.

ஆனால் அண்மையில் வீகன் (Vegan) எனப்படும் சைவ முறையில் அமைந்த பட்டுப்புடவைகள் வந்துள்ளன.

வீகன் சைவமுறை

வீகன் சைவமுறை என்பது மாமிசம் அல்லது விலங்குகளிடமிருந்து வரும் பொருள்களைத் (பால் போன்றவை) தவிர்ப்பது. அது வழக்கமான சைவ நடைமுறையிலிருந்து சற்று மாறுபட்டது. சைவத்தைக் கடைப்பிடிப்பவர்கள் பொதுவில் பால் சார்ந்த பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்வர்.
சுருக்கமாகப் பார்க்க
வீகன் பட்டு என்றால் என்ன?

வழக்கமாகப் பட்டுப்புடவைகள் பட்டுப் புழுக்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

அதற்குப் பட்டுப் புழுக்களைக் கொல்லவேண்டும் என்பதால் வீகன் சைவத்தைப் பின்பற்றுபவர்கள் பாரம்பரியப்
பட்டுப் புடவைகளை அணியமாட்டார்கள்.

அவர்கள் தாவரங்களிலிருந்து வரும் பட்டுநூலைக் கொண்டு நெய்யப்படும் புடவைகளை உடுத்துவர்.

மூங்கில், சோயா, அன்னாசி, வாழை ஆகியவை மூலம் பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது.

குறிப்பாக வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் புடவைகள் பிரபலமாகி வருகின்றன.

தமிழில் அவற்றை வாழைநார்ப்பட்டு என்று அழைப்பதுண்டு.

பாரம்பரியப் பட்டுப் புடவைகளைப் போலவே வாழைநார்ப் பட்டுகளும் பார்ப்பதற்கும் தொடுவதற்கும் இருக்குமெனச் சில கடைகள் கூறுகின்றன.

வீகன் பட்டுப்புடவைகளின் பலன்கள்?

🥻 விலங்குகளை வதைக்காமல் புடவைகளைத் தயாரிக்கலாம்

🥻 நீடித்த நிலைத்தன்மையை ஆதரித்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்