Skip to main content
அடுத்த ஆண்டு வெனிஸ் நகருக்குள் நுழைய 5 யூரோ கட்டணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

அடுத்த ஆண்டு வெனிஸ் நகருக்குள் நுழைய 5 யூரோ கட்டணம்

வாசிப்புநேரம் -
அடுத்த ஆண்டு முதல் வெனிஸ் (Venice) நகருக்குள் நுழைய ஒருவருக்கு 5 யூரோ வசூலிக்கப்படவுள்ளது.

இத்தாலியின் பாரம்பரிய நகரான அது ஒருநாள் மட்டும் வந்துசெல்லும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயல்கிறது.

புதிய திட்டம் அடுத்த ஆண்டு கோடைக்காலத்திலும் வசந்த காலத்திலும் 30 நாள்களுக்குச் சோதிக்கப்படும்.

நகரின் குடியிருப்பாளர்கள், மாணவர்கள், 14 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் ஆகியோர் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.

இரவில் தங்கப்போகும் சுற்றுப் பயணிகளுக்கும் அது பொருந்தாது.

திட்டத்திற்கு நகர மன்றம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

நகரின் சில பகுதிகளில் அன்றாட சுற்றுப்பயணங்களைக் குறைக்க விரும்புவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

அளவுக்கு அதிகமான சுற்றுப் பயணிகளின் வருகையாலும் பருவநிலை மாற்றத்தாலும் வெனிஸ் மீள முடியாத அளவு பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்