Venus Flytrap செடியின் 100 ஆண்டு ரகசியம் உடைந்தது!
வாசிப்புநேரம் -
Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அழகிய இளஞ்சிவப்பு நிற இதழ்களோடு...
தேன் போன்ற நறுமணம் பரப்பி...
அமைதியாகக் காத்திருக்கிறது...
மரணத்தின் வாசலில் இருப்பதை அறியாத பூச்சிகள்...
நறுமணத்தில் மயங்கி செடியின் இலைகளில் கால் வைக்கும் போது...
செடி சட்டெனத் தன் இதழ்களை மூடி அவற்றைத் தின்னும்...
வீனஸ் ஃபிளைட்ராப் (Venus Flytrap) எனும் செடி நூற்றாண்டுக்கும் மேலாக விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராய் இருந்தது.
செடியின் இதழ்கள் மின்னல் வேகத்தில் செயல்படும் ரகசியத்தை இறுதியாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
செடியின் உட்புறத் தசை தூண்டப்படும்போது
இலையின் மேற்பரப்பில் உள்ள உயிரணுக்கள் விரைவாக இலையை மென்மையாக்குகின்றன.
அந்த மாற்றம் ஒரு வினாடிக்குள் அதன் இலையை மூடச் செய்கிறது.
ஒரு சிறப்புக் கருவியைப் பயன்படுத்தி தூண்டப்பட்ட தாவரத்தின் இலைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
சோதனையின் போது இலைகள் திடீரென மூடாமலிருக்க அவற்றை பல் மருத்துவப் பசையால் (dental glue) நிலையாக வைத்தனர்.
இலையின் வெளிப்புற உயிரணுக்கள் உடனடியாக மென்மையாகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் மாறுவது அப்போது கண்டறியப்பட்டது.
அதனால் இலைகள் மூடுவதற்குக் காரணம் உயிரணுக்களின் நெகிழ்வுத்தன்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
நீண்ட காலமாய் நீடித்த புதிருக்கும் விடை கண்டறியப்பட்டது.

ஆதாரம் : Others/The Guardian