வாழ்வியல் trending
காப்பியா? டுரியானா? - வியட்நாமில் புதுக்கேள்வி
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வியட்நாமின் மத்திய மலைப்பகுதி பல ஆண்டாகக் காப்பிக்குப் பெயர்போனது.
ஆனால் அங்குள்ள விவசாயிகள் இப்போது டுரியான் பழம்மீது கவனத்தைச் செலுத்துகின்றனர்.
வியட்நாம் 2022ஆம் ஆண்டு சீனாவின் டுரியான் சந்தைக்குள் தடம்பதித்தது.
கடந்த ஆண்டு சீனாவின் ஆகப் பெரிய விநியோகிப்பாளராக வியட்நாம் இடம்பிடித்தது.
காப்பியைவிட டுரியான் பழ விற்பனை அதிக லாபத்தைத் தருவதாய் உழவர்கள் கூறினர்.
உழவர் பாம் சுவான் லானிற்கு 400 டுரியான் மரங்கள் உள்ளன.
சுமார் 60 டன் பழங்கள் அவற்றின்வழி அவருக்குக் கிடைக்கிறது.
டுரியான் பழ வியாபாரத்தால் கார், பிள்ளைகளுக்கு வீடுகள்,
குடும்பத்துக்குப் பெரிய சொகுசு வீடு என ஆடம்பரமாக வாழ முடிவதாய் அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு சீனா சுமார் 7.5 பில்லியன் டுரியான் பழங்களை இறக்குமதி செய்தது.
அதேவேளை வியட்நாம் அதன் டுரியான் ஏற்றுமதி இந்த ஆண்டு 4 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.
எனினும் கண்ணும்கருத்துமாக இருக்கும்படி வியட்நாம் விவசாயிகளை எச்சரித்திருக்கிறது.
அதிகமான உற்பத்தி, குறைந்த தரம் எனும் நிலைமை ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
ஆயினும் காப்பி விற்றுக்கொண்டிருந்த சிலர் டுரியான் பழங்களை விற்க முயற்சிசெய்து தோல்விகண்டனர். மீண்டும் அவர்கள் காப்பி விற்பனைக்கே சென்றதாய் கூறினர்.
அதனால் டுரியான் விற்பனைக்கு அதிர்ஷ்டமும் தேவை என்று சிலர் கூறினர்.

ஆதாரம் : AFP