உள்ளங்கையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துவது சாத்தியமா?
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் VISA நிறுவனம் உள்ளங்கையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறையைச் சோதித்து வருகிறது.
தற்போது நிறுவனத்தின் குறிப்பிட்ட சில ஊழியர்கள் மட்டுமே, ராபின்சன் சாலையில் அமைந்துள்ள அல்கெமிஸ்ட் (Alchemist) உணவகத்தில் அந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும்.
சோதனைத் திட்டம் விரிவுபடுத்தப்படும்போது DBS, OCBC, UOB ஆகிய வங்கிகளின் Visa கடன்பற்று அட்டை வைத்திருப்போரும் அங்கு அந்தச் சேவையைப் பயன்படுத்த இயலும்.
பின்னர் மற்ற கடைகளுக்கும் சோதனைத் திட்டம் விரிவுபடுத்தப்படக்கூடும்.
ஆனால் VISA நிறுவனம் சோதனைத் திட்டம் எப்போது விரிவுபடுத்தப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவிலை.
இதற்கிடையில் 2019ஆம் ஆண்டு முதல் Octobox நிறுவனம் தனது ஊழியர் இல்லா கடைகளில் அந்தச் சேவையை வழங்கி வருகிறது. அடுத்த ஆண்டு (2025) ஜனவரியில் அது 7வது கிளையைத் திறக்கவுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியினால் கட்டணம் செலுத்தும் முறையை எளிதாக்க உள்ளங்கை பயன்பாடு உதவினாலும் தனிநபர் தகவல் பாதுகாப்பில் சிக்கல்கள் எழலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டணம் செலுத்தச் சேகரிக்கப்படும் தரவுகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டால் கடன்பற்று அட்டைகளை மாற்றுவதைப் போல உள்ளங்கை குறித்த தரவுகளை மாற்றமுடியாது என்று அவர்கள் சுட்டினர்.

ஆதாரம் : CNA