Skip to main content
"மன்னிப்புக் கேட்பதாக இருந்தால் இப்படித்தான் கேட்க வேண்டும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

"மன்னிப்புக் கேட்பதாக இருந்தால் இப்படித்தான் கேட்க வேண்டும்"

வாசிப்புநேரம் -

ஜப்பானில் வாலிபால் (volleyball) போட்டியின்போது ஊழியரைத் தவறுதலாகப் பந்தால் அடித்ததற்காக வாலிபால் வீரர் தரையில் சறுக்கியவாறு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

போட்டியின்போது யுஜி நிஷிடா (Yuji Nishida) வீசிய பந்து விளையாட்டரங்கின் ஊழியரைப் பதம் பார்த்தது. 

அதை அறிந்தவுடன் நிஷிடா ஓடோடி வந்து தரையில் சறுக்கினார்.

சறுக்கியவாறு அவர் அந்த ஊழியரின் கால்களில் விழுந்தார்.

ஊழியரை நெருங்கியவுடன் அவர் மண்டியிட்டுப் பல முறை தலையைத் தாழ்த்தி மன்னிப்புக் கேட்டார்.

சம்பவம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) நடந்தது.

அந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

போட்டியைக் காண வந்திருந்தவர்கள் நிஷிடாவின் செயலுக்குக் கைதட்டியது தெரிந்தது.

காணொளியைக் கண்ட இணையவாசிகளும் அவருக்குப்  பாராட்டுகளைக் குவிக்கின்றனர்.

"மன்னிப்புக் கேட்பதாக இருந்தால் இப்படித்தான் கேட்க வேண்டும்," என்று பலர் பதிவிட்டனர்.

"எவ்வளவு அடக்கமாக நடந்துகொள்கிறார்," என்றும் சிலர் குறிப்பிட்டனர்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்