Skip to main content
தினமும் 10,000 அடிகளா? தேவையில்லை... 7,000 அடிகள் நடந்தாலே போதும் : ஆய்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

தினமும் 10,000 அடிகளா? தேவையில்லை... 7,000 அடிகள் நடந்தாலே போதும் : ஆய்வு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தினமும் 7,000 அடிகள் நடந்தால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைவதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக நாள்தோறும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் அது ஆய்வுரீதியாக நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல.

1960களில் நடக்கும் அடிகளைக் கணக்கிடும் ஜப்பானியக் கருவியை விற்பதற்காக செய்யப்பட்ட விளம்பரம்.

உண்மையான எண்ணிக்கை என்ன என்பதைக் கணக்கிட ஒரு குழு ஏற்கனவே செய்யப்பட்ட 57 ஆய்வுகளை ஆராய்ந்தது.

அந்த ஆய்வுகளில் மொத்தம் 160,000 பேர் கலந்துகொண்டனர்.

ஆய்வு முடிவுகள் Lancet பொது மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

தினமும் 7,000 அடிகள் நடந்தால்...

🚶‍➡️முன்கூட்டியே மரணம் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட பாதியாகக் குறைகிறது

🚶‍➡️மறதி நோய் ஏற்படும் அபாயம் 38% ⬇

🚶‍➡️மனச்சோர்வு ஏற்படும் அபாயம் 22% ⬇

🚶‍➡️நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் 14% ⬇

புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறைவதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் குறைவாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.

தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு துணை ஆய்வாளர் குறிப்பிட்டார்.

தினமும் 10,000 அடிகள் நடப்பவர்கள் அதையே பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.
 
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்