Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கடையில் பளபளவென்று மின்னும் பழங்கள்...தோலை உரித்துத்தான் சாப்பிடவேண்டுமா?

வாசிப்புநேரம் -

கடைகளில் பழங்கள் பளபளவென்று தோன்றலாம்...

'எல்லாம் பூசப்பட்ட மெழுகு! ரசாயனம்!' என்று எண்ணி...பழங்களின் தோலை உரித்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளீர்களா?

இயல்பாக உருவாகும் மெழுகு

பழங்கள் இயற்கையாகவே பளபளவென்று தோன்றும்.

அவற்றின் தோலில் இயல்பாக உருவான மெழுகின் அடுக்கு உள்ளது.

பழங்கள் விரைவில் கெட்டுப் போவதையும் ஈரப்பதத்தை இழப்பதையும் தடுக்க மெழுகு உதவும்.

இருப்பினும் பழங்களைக் கழுவும்போதே பெரும்பாலான மெழுகு நீக்கப்படுகிறது.

செயற்கை முறையில் பூசப்படும் மெழுகு

பழங்களில் உள்ள இயற்கை மெழுகை வலுப்படுத்த உற்பத்தியாளர்கள் செயற்கை மெழுகைச் சேர்ப்பதுண்டு.

அது பழங்களின் தோலில் உள்ள சிறிய இடைவெளிகளை நிரப்ப உதவுவதோடு பாக்டீரியா, பூஞ்சை வகைகள் நுழைவதைத் தடுக்க உதவும்.

பழங்கள் கெடாமல் கூடுதல் காலத்துக்கு நீடிப்பதையும் அது உறுதிசெய்ய உதவும்.

செயற்கை முறையில் மெழுகு பூசப்படுவதற்குக் காரணம் இருக்கலாம்....

ஆனால் மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா? சாப்பிடுவதற்குமுன் பழங்களின் தோலை அகற்றவேண்டுமா?

மெழுகைச் செயற்கைப் பொருள்களைக் கொண்டும் இயற்கைப் பொருள்களைக் கொண்டும் உற்பத்தி செய்யலாம்.

உணவுத் தரநிலை அங்கீகாரத்தைப் பெற்ற மெழுகைக் கொண்ட பழங்கள் பாதுகாப்பானவை. பழங்களின் தோலை உட்கொள்ளமுடியும்.

இருப்பினும் பழங்களை எப்போதும் ஓடும் குழாய்நீரில் கழுவும்படி அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

அதன்வழி பழங்களின் தோலில் இருக்கக்கூடிய அழுக்கை நீக்கமுடியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்