50,890 படிகக்கற்கள் கொண்ட திருமண ஆடை கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில்

Instagram/@guinnessworldrecords
ஆக அதிகமான படிகக்கற்களைக் கொண்ட திருமண ஆடை கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
அந்தச் செய்தியை The Hindustan Times நாளேடு வெளியிட்டது.
அதனைக் கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு அதன் Instagram பக்கத்தில் பகிர்ந்தது.
"50,890 படிகக்கற்கள் கொண்ட திருமண ஆடையை மிக்கேலா பெர்ரெய்ரோ (Michela Ferriero) வடிவமைத்துள்ளார்" என அது கூறியது.
அந்தப் பதிவில் அது காணொளி ஒன்றையும் வெளியிட்டதாக The Hindustan Times நாளேடு சொன்னது.
அந்தத் திருமண ஆடையை விளம்பரக் கலைஞர் ஒருவர் அணிந்துகொண்டு பவனி வருவதைக் காணலாம்.
அதனைக் கண்ட இணையவாசிகள் அவர்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
"அது கண்டிப்பாகக் கனமாக இருக்கவேண்டும்"
"உண்மையிலேயே அந்தத் திருமண ஆடையில் எவ்வளவு படிகக்கற்கள் உள்ளன என்பதை ஒருவர் எண்ணினாரா?"
"இந்த ஆடையை எப்படிக் கழுவுவது?"
"இதனைப் பார்க்கும்போது கண்ணுக்கு விருந்தளிப்பது போல் உள்ளது"