Skip to main content
இருளில் குளித்தால் நன்றாகத் தூங்கமுடியுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

இருளில் குளித்தால் நன்றாகத் தூங்கமுடியுமா?

வாசிப்புநேரம் -
இருளில் குளித்தால் உண்மையில் ஒருவருக்குத் தூக்கம் வர உதவலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருளில் குளிப்பதை மெச்சி இணையவாசிகள் பலர் அண்மைக்காலத்தில் சமூக ஊடகத்தில் காணொளிகளைப் பதிவிட்டனர்.

மனநிலையைச் சீராக்க அது உதவுவதாகவும்...ஒரு முறை அவ்வாறு குளித்தால் மீண்டும் மீண்டும் அவ்வாறு குளிக்கத் தோன்றும் என்று இணையவாசிகள் கூறினர்.

ஒளி மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டது என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் Amen மருந்தகத்தின் மனநல மருத்துவர் டேனியல் ஏமென் (Daniel Amen) சொன்னார்.

"இருளிலோ மங்கலான வெளிச்சத்திலோ குளிக்கும்போது, ஒருவரின் கண்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. அவரின் கவனமும் சிந்தனையும் ஒருநிலைப்படும். ஓய்வெடுக்கும் நேரம் என்றும் மூளை எண்ணிவிடும்," என்று Fox News ஊடகத்திடம் சொன்னார் அவர்.

பதற்றம், தூக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று டாக்டர் ஏமென் சொன்னார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்