Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கலிபோர்னியா: குளிர்காலத்தில் கூடுதல் மழை... நீண்டகால வறட்சிக்கு முற்றுப்புள்ளி?

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் நீர்த்தேக்கங்களில் கூடுதல் தண்ணீர் சேர்ந்திருக்கிறது. 

முன்னதாக, அங்குள்ள நீர்த்தேக்கங்கள் வறண்ட நிலையில் இருந்தன. 

இந்நிலையில், மாநிலத்தின் 40 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு அடிக்கடி தண்ணீரைச் சேமிக்கவேண்டும் என்று நினைவூட்டப்பட்டது. 

வீட்டுத் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

எனினும், கலிபோர்னியாவில் குளிர்காலத்தில் பெய்த மழை, பல பகுதிகளில் நிலவிய நீண்டகால வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

சென்ற ஆண்டுக்கும் இவ்வாண்டுக்கும் இடையில் குளிர்காலத்தில் பெய்த மழையால், வறண்ட ஆறுகளிலும் ஏரிகளிலும் மீண்டும் நீரோட்டம் தொடங்கியுள்ளது. 

தற்போது, மாநிலத்தின் 10 விழுக்காடு மட்டுமே வறட்சியை எதிர்நோக்குகிறது. 

ஓராண்டுக்கு முன்னர், கலிபோர்னியா முழுவதும் வறண்ட நிலையில் இருந்தது.

 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்