இணையத்தில் பிரபல வெள்ளரிக்காய் சமையல் குறிப்புகள்.. பின்பற்றலாமா, தவிர்க்கலாமா?
வாசிப்புநேரம் -

(படம்: Envato Elements)
வெள்ளரிக்காய் உடலுக்குக் குளிர்ச்சியை வழங்கும்..
கடந்த ஆண்டில் (2024) பிரபலமான வெள்ளரிக்காய் சமையல் குறிப்புகள் பல சமூக ஊடகங்களில் வெளியாகின.
மில்லியன் கணக்கான இணையவாசிகள் அவற்றைப் பார்த்தனர்.
ஆனால் பலருக்குப் பின்வரும் கேள்விகள் இருக்கலாம் :
சுகாதாரம் என்று வரும்போது அந்தக் குறிப்புகளைப் பின்பற்றலாமா?
சாப்பாட்டிலிருந்து அதனை அகற்ற வேண்டுமா?
இணையத்தில் பிரபலமாகும் சில போக்குகளைத் தவிர்க்கலாம். ஆனால் வெள்ளரிக்காய் என்று வரும்போது அதனைத் தவிர்க்கத் தேவையில்லை என்று அமெரிக்காவின் மக்கள்தொகை சுகாதார, நோய்த் தடுப்பு நிபணர் டாக்டர் மேத்தியு லெண்ட்ரி (Matthew Landry) கூறினார்.
மக்கள் அதிகமான காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதைப் பார்ப்பது தமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றார் அவர்.
நொறுக்குத் தீனிக்குப் பதிலாக வெள்ளரிக்காய் இன்னும் ஆரோக்கியமான உணவு என்று அவர் சொன்னார்.

ஆதாரம் : South China Morning Post