Skip to main content
மேக வெடிப்பு என்றால் என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மேக வெடிப்பு என்றால் என்ன?

வாசிப்புநேரம் -
மேக வெடிப்பு என்றால் என்ன?

(படம்: Envato Elements)

வெளியீடு : 20 Aug 2025 10:00PM புதுப்பிப்பு : 21 Aug 2025 09:17AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மேக வெடிப்பால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மலைப்பகுதிகளில் கனமான வெள்ளம் நேர்ந்திருக்கிறது.

இதுவரை பாகிஸ்தானில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

அடைமழையினால் நிலச்சரிவு நேர்ந்திருக்கிறது. பலர் இதில் தங்கள் வீடுகளை இழந்தனர்.

இந்தியாவின் உத்தரக்காண்ட் மாநிலத்தில் இம்மாதம் மேக வெடிப்பால் அடைமழையும் வெள்ளமும் ஏற்பட்டன.

மேக வெடிப்பு என்றால் என்ன?

குறுகிய காலத்தில் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழைநீர் 30 சதுர கிலோமீட்டர் அளவில் விழுந்தால் அந்தச் சம்பவத்தை மேக வெடிப்பு என்கின்றனர்.

திடீரென்று நடக்கக்கூடும். பலமான சேதத்தை ஏற்படுத்தும்.

எப்படி ஏற்படுகிறது?

ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் காற்று மேகங்களாகக் கூடும்போது மேக வெடிப்புகள் நடக்கலாம்.

மலைப்பகுதிகளில் மேக வெடிப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மேக வெடிப்புகள் உருவாக நிலைமை உகந்ததாக இருக்கிறது.

பருவநிலை மாற்றத்தால் மேக வெடிப்புகள் அதிகமாக நடக்கின்றன

வெப்பநிலை அதிகரிக்கும்போது மேக வெடிப்புகள் நடக்க வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

மேக வெடிப்புகள் எப்போது நடக்கும், எந்த அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணிப்பது கடினம்.

ஆனால் மக்கள் மேக வெடிப்புகளுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளலாம்.

நதிகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் அருகே வீடுகளைக் கட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.

கனமழை கணிக்கப்பட்டால் மலைப்பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.

மழைநீரை உறிஞ்ச மேலும் மரங்களை நடவேண்டும்.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்