Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நுண்ணலை அடுப்பில் உணவைச் சுடவைக்கவேண்டும்...எந்தப் பாத்திரத்தில் வைப்பது?

வாசிப்புநேரம் -
நுண்ணலை அடுப்பில் உணவைச் சுடவைக்கவேண்டும்...எந்தப் பாத்திரத்தில் வைப்பது?

(படம்:unsplash)

உணவை நுண்ணலை அடுப்பில் சுட வைக்கப் போகிறீர்களா?

பிளாஸ்டிக் கொள்கலன் உள்ளது...உலோகப் பாத்திரம் உள்ளது....பீங்கான் தட்டு உள்ளது....

'உணவை எதில் வைத்துச் சுடவைக்கலாம்?' என்று சந்தேகம் எழக்கூடும்.

சில பொருள்களை நுண்ணலை அடுப்பில் வைத்தால் தீப்பற்றும் சாத்தியம் உண்டு.

எந்தெந்தப் பொருள்களை நுண்ணலை அடுப்பில் வைக்கமுடியும்?

 

📌குறியீட்டைக் கொண்டிருக்கும் பாத்திரங்கள்

பொருள்களுக்கு அடியில் நுண்ணலை அடுப்பைக் குறிக்கும் ஒரு சின்னமோ கதிர்வீச்சைக் குறிக்கும் ஒரு சின்னமோ இருக்கும். சின்னம் இருந்தால் அஞ்சத் தேவையில்லை.

குறியீடு இல்லாத பாத்திரங்களை அவற்றின் மூலப்பொருளைக் கொண்டு நுண்ணலை அடுப்பில் வைக்கமுடியுமா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

 

📌கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள்

கையால் செய்யப்பட்ட பீங்கான் பாத்திரங்களில் உலோக வேலைப்பாடுகள் இருக்கலாம். எனவே அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது.
இதர கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களை் நுண்ணலை அடுப்பில் வைக்கமுடியும்.

 

📌பிளாஸ்டிக் பாத்திரங்கள்

குறியீடு உள்ள பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது.

 

📌காகிதத் தட்டுகள், டிஷ்யூ தாள்கள்

அவற்றைப் பொதுவாகப் பயன்படுத்தமுடியும். தட்டுகளில் பிளாஸ்டிக் படிவம் இருந்தால் கவனமாக இருக்கவேண்டும். தட்டுகளில் குறியீடு இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.

 

📌"Styrofoam" வகைப் பொருள்கள்

குறியீடு இல்லாத பொட்டலங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு.

 

📌காகித அட்டை

காகித அட்டைகளில் பசை, மெழுகு போன்ற பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நுண்ணலை அடுப்பில் வைப்பது ஆபத்தாக இருக்கலாம்.

 

📌உலோக அம்சங்களைக் கொண்ட பாத்திரங்கள்

அவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. உலோகம் பொதுவாக நுண்ணலை கதிர்வீச்சை ஏற்றுக்கொள்ளாது. நுண்ணலை அடுப்பில் கதிர்வீச்சு சேரும்போது அது தீயை ஏற்படுத்தலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்