Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தேசியக் கொடி- செய்யக்கூடியது, செய்யக்கூடாதது

தேசியக் கொடி நம் நாட்டின் கொள்கைளையும் நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.

வாசிப்புநேரம் -
தேசியக் கொடி- செய்யக்கூடியது, செய்யக்கூடாதது

கோப்புப் படம்: Today

தேசியக் கொடி நம் நாட்டின் கொள்கைளையும் நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.

சிங்கப்பூரின் அடிப்படைப் பண்புகளின் அடையாளமாகவும் சின்னமாகவும் தேசியக் கொடி திகழ்கிறது.

தேசியக் கொடியை முறையான வகையில் கையாள்வது ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.

சிங்கப்பூர்க் கொடியைக் கையாளும் முறை

-தேசியக் கொடியின் சின்னத்தை மற்ற ஆவணங்களில் பயன்படுத்தும்போது  அது 3:2 என்ற அளவில் இருக்க வேண்டும். கொடியில் உள்ள சிவப்பு நிறம் Pantone பட்டியலில் 032. வெள்ளை நிறம் Pantone White ஆக இருக்க வேண்டும்.

- கட்டடங்களுக்கு வெளியில் கொடிகள் பறக்கவிடப்படும்போது, அவற்றைக் கட்டடத்தின் முன்புறத்திலோ, அவற்றின் மேல்தளத்திலோ மட்டுமே பறக்கவிடலாம்.

- தேசிய தினக் கொண்டாட்ட காலத்தைத் (ஜூலை 1 முதல் செப்டம்பர் 30) தவிர்த்து மற்ற நாள்களில் தேசியக் கொடி கம்பத்தில் மட்டுமே பறக்கவிடப்பட வேண்டும்.

- இரவில் கொடிமீது போதுமான அளவு வெளிச்சம் இருக்க வேண்டும்.

- உள்ளூரில் மற்ற கொடிகளுடன் பறக்கவிடப்படும் போது சிங்கப்பூர்க் கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அது பறக்கவிடப்படவேண்டும்.

எது முறையல்ல?

- விளம்பரங்களுக்கோ, வர்த்தகப் பயன்பாட்டுக்கோ சிங்கப்பூர்க் கொடியைப் பயன்படுத்தக்கூட்டது.

-அலங்காரப் பொருளாகக் கொடியைப் பயன்படுத்தகூடாது.

- தனிநபர்களின் இறுதிச் சடங்கில் கொடியைப் பயன்படுத்தக்கூடாது.

-சிங்கப்பூர்க் கொடியின் வடிவம் மற்ற ஆடைகள்மீது இருக்கக்கூடாது; அதைத் தனிநபர் வாகனங்களில் பயன்படுத்தக்கூடாது. (ஆனால், தேசிய தின காலகட்டத்தில் இதற்கு விதிவிலக்கு உண்டு - முறையான மரியாதையுடன் அவை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்)

-கொடி அழுக்காக இருந்தால் அதைச் சலவை செய்யலாம், ஆனால் மற்ற ஆடைகளுடன் அதை உலர்த்தக்கூடாது.

- கொடிகள் சேதமாகிவிட்டால் அவற்றைக் கருப்புப் பையில் இறுக்கிக் கட்டி, குப்பையில் போட வேண்டும். கொடி குப்பையில் இருப்பது வெளியில் தெரியக்கூடாது.

-சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள சமூக மன்றங்களிலோ, குடியிருப்பாளர் குழு நிர்வாகத்திடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

நன்றி: https://www.nhb.gov.sg

 

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்