Ferritin Face - தெரியுமா?
படங்கள்: TikTok
This audio is generated by an AI tool.
"உங்களுக்கு Ferritin Face இருக்கிறதா?"
TikTok தளத்தில் இது பிரபலம் அடைந்திருக்கிறது.
கருவளையங்கள், பொலிவிழந்த சருமம், எளிதில் உடையக்கூடிய முடி.
சோர்வாகக் காட்சியளித்தால் இரும்புச்சத்துக் குறைபாட்டைக் கண்டறியலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
முகத்தைப் பார்த்தவுடனேயே அதை அறியலாம் என்பது அவர்கள் கருத்து.
Ferritin என்றால் என்ன?
Ferritin என்பது ஒருவகையான புரதச்சத்து. உடலிலுள்ள இரும்புச்சத்து அதில்தான் இருக்கும்.
Ferritin குறைந்துவிட்டால் உடலில் இரும்பு இருப்பு குறையும்.
இரும்புச்சத்துக் குறைபாடு பெரும்பாலும் பெண்களிடம் காணப்படுவதாக மருத்துவர்கள் BBCயிடம் கூறினர்.
ஒரு லிட்டர் ரத்தத்துக்குக் குறைந்தபட்சம் 30 மைக்ரோகிராம் Ferritin இருக்கவேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.
15 மைக்ரோகிராம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் கடுமையான இரும்புச்சத்துப் பற்றாக்குறை இருப்பதற்கான அறிகுறி என்று அவர்கள் சொல்கின்றனர்.
முகத்திலிருந்தே அறியலாமா?
கருவளையங்கள், பொலிவிழந்த தோல் ஆகியவை இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் அவற்றை எப்போதும் நம்பமுடியாது என்று மருத்துவர்கள் BBCயிடம் தெரிவித்தனர்.
இத்தகைய அறிகுறிகள் ஒருவருக்குப் பொருந்தலாம்; ஆனால் வேறொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. சில முகங்கள் வேறு மாதிரி தெரியலாம்.
Ferritin Face - விழிப்புணர்வா? பொய்த்தகவலா?
முகத்தைப் பார்த்து இரும்புச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிவதற்குப் பதிலாக ரத்தப் பரிசோதனை செய்வது நல்லது என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
ரத்தப் பரிசோதனை மூலம் இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான காரணத்தை அறியலாம்; அதற்குத் தகுந்த சிகிச்சையை வழங்கலாம்.
ஆனால் சமூக ஊடகத்தில் Ferritin குறித்து தகவல்கள் பரவுவதால் பெண்கள் பலர் இரும்புச்சத்துக் குறைபாட்டைப் பற்றி மேலும் அறிகின்றனர் என்று BBCயிடம் பேசிய ஒருவர் கூறினார்.
பெண்களின் சுகாதாரத்துக்கு இது பலனளிக்கிறது என்பது அவருடைய கருத்து.