Skip to main content
பயணப் பெட்டி வரவில்லையா? உடனே என்ன செய்ய வேண்டும்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

பயணப் பெட்டி வரவில்லையா? உடனே என்ன செய்ய வேண்டும்?

வாசிப்புநேரம் -
பயணப் பெட்டி வரவில்லையா? உடனே என்ன செய்ய வேண்டும்?
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

விமானத்திலிருந்து இறங்கிவிட்டீர்கள்.

பயணப் பெட்டிக்காகக் காத்திருக்கிறீர்கள்.

ஒவ்வொன்றாக எல்லாப் பெட்டிகளும் வந்துவிட்டன.

ஆனால் உங்களுடையது மட்டும் வரவில்லை!

பேங்காக்கில் (Bangkok) அண்மையில் பெய்த கனமழையும் வெள்ளமும் இதுபோன்ற நிலையை ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஏற்படுத்தின.

சுவர்ணபூமி விமான நிலையத்தில் தாய் ஏர்வேஸ் (Thai Airways) நிறுவனத்தின் சில சேவைகள் பாதிக்கப்பட்டன.

செப்டம்பர் 29ஆம் தேதி சுமார் 5,600 பயணப் பெட்டிகள் தேங்கியிருந்ததாக நிறுவனம் கூறியது.

பெட்டி வரவில்லை என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
விமான நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்

பயணப் பெட்டி வரவில்லை என்றால், முதலில் விமான நிறுவனத்திடம் புகார் செய்ய வேண்டும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் (IATA) அறிவுறுத்துகிறது.

சிங்கப்பூர் பொதுக் காப்புறுதிச் சங்கமும் அதே ஆலோசனையை வழங்குகிறது.

விமான நிறுவனத்தின் முகப்புக்குச் சென்று ‘Property Irregularity Report’ (PIR) எனப்படும் புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.

PIR என்றால் என்ன?

காணாமற்போன பயணப் பெட்டி குறித்த விவரங்களைப் பதிவு செய்யும் புகார் அது.

அதன் அடிப்படையில் விமான நிறுவனம் பெட்டியைத் தேடத் தொடங்கலாம்.

பின்னர் காப்புறுதித் தொகைக்கு விண்ணப்பிக்கும்போதும் அந்த அறிக்கை தேவைப்படலாம்.
Related article image
AFP
சிறிய பயணப் பெட்டி ரசீதை வைத்துக்கொள்ள வேண்டும்

பெட்டியை ஒப்படைக்கும்போது விமான நிறுவனம் சிறிய அடையாள ரசீதை வழங்கும்.

அதைப் பாதுகாப்பாய் வைத்திருப்பது முக்கியம்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) பயணிகள் செல்லவிருக்கும் நாட்டை அடைந்த பிறகும் அந்த ரசீதை வைத்திருக்க அறிவுறுத்துகிறது.

அதில் பெயர், பெட்டிகளின் எண்ணிக்கை, செல்லுமிடம் ஆகியவை சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

21 நாளாகியும் பெட்டி வரவில்லையா?

மாண்ட்ரியல் உடன்பாட்டின்படி (Montreal Convention) விமான நிறுவனம் பெட்டி தொலைந்துவிட்டதாக ஒப்புக்கொண்டால் பயணிகளுக்கு உரிய சட்ட உரிமைகள் உள்ளன.

அல்லது பெட்டி வரவேண்டிய நாளிலிருந்து 21 நாள் கடந்தும் கிடைக்கவில்லை என்றாலும் அந்த உரிமைகளைக் கோரலாம்.

ஆனால் இன்னோர் 21 நாள் விதியும் உள்ளது.

பயணியிடம் பெட்டி ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாளுக்குள் தாமதம் குறித்து விமான நிறுவனத்திடம் புகார் செய்ய வேண்டும்.

எனவே பயணப் பெட்டி வரவில்லை என்றால் காத்திருக்காமல் உடனே புகார் செய்வது முக்கியம்.

PIR அறிக்கை பயணப் பெட்டி ரசீது உள்ளிட்ட ஆவணங்களையும் பாதுகாப்பாய் வைத்திருப்பது அவசியம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்