Skip to main content
சீனப் புத்தாண்டுச் சிறப்பு உணவு Lo Hei
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

சீனப் புத்தாண்டுச் சிறப்பு உணவு Lo Hei - அதன் அர்த்தம்?

வாசிப்புநேரம் -
சீனப் புத்தாண்டுச் சிறப்பு உணவு Lo Hei - அதன் அர்த்தம்?
படம்: Envato Elements
சீனப் புத்தாண்டின்போது குடும்பங்கள் ஒன்றுகூடி லோ ஹே (lo hei) செய்வது வழக்கம்.

இப்போது பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் அதைச் செய்வது பிரபலமடைந்துள்ளது.

யூஷெங் (yusheng) எனும் சிறப்பு உணவை chopsticks குச்சிகளால் உயரத் தூக்கிப் போடுவது லோ ஹே.

அதன் பொருள் என்ன?

யூஷெங் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. புத்தாண்டின்போது அதை உண்டால் நீண்ட நாள் வசதியாக வாழலாம் என்பது நம்பிக்கை.

அதில் பொதுவாகப் பச்சை மீனும் மற்ற துருவிய காய்கறிகளும் இருக்கும்.

மீன் என்ற சொல்லைச் சீன மொழியில் "யூ" என்பார்கள். அதன் மற்றொரு பொருள் செல்வம்.

அதே போல் "ஷெங்" எனும் சொல்லுக்கும் இரு பொருள்கள் இருக்கின்றன. சமைக்கப்படாத உணவையும் நீண்ட ஆயுளையும் "ஷெங்" என்பார்கள்.

அதனால் செல்வம் மிகுந்த நீண்ட வாழ்க்கையைப் பெற சீனர்கள் பச்சை மீன் கலந்த யூஷெங்கைப் புத்தாண்டு அன்று சாப்பிடுவார்கள்.

யூஷெங்கைக் குச்சிகளால் கலந்து உயரமாகத் தூக்கி போட்டால் செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

சிங்கப்பூரில் அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் யூஷெங்கிலும் பல விதங்கள் அறிமுகமாகியுள்ளன.

ஹலால், சைவம் ஆகிய வகை யூஷெங்குகள் உணவகங்களிலும் பேரங்காடிகளிலும் விற்கப்படுகின்றன.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்