Skip to main content
உங்களைக் கவரக்கூடிய ஒருவர் யார்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

உங்களைக் கவரக்கூடிய ஒருவர் யார்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகில் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்...

ஆனால் உங்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவர்கள் சிலர் மட்டுமே இருப்பார்கள்...

அப்படி அவர்களைத் தனித்துவமாக்குவது எது?

Journal Of Experimental Psychology எனும் சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகள்படி....

- மற்றவர்களுடன் உற்சாகமாகப் பழகுவது

- இன்பமயமான வாழ்க்கையை வாழ்வது

- செல்வாக்குடன் இருப்பது

- துணிச்சலாக இருப்பது

- சுதந்திரமாக இருப்பது

ஆகியவைக் கவரக்கூடிய அம்சங்களாக விளங்குகின்றன.

உலகெங்கும் 6,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அத்தகைய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன.

பாலினம், வயது, வருமானம், கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் வேறுபட்டாலும் பெரும்பாலோர் ஒரே வகையான அம்சங்களையே அடையாளம் கண்டதை எண்ணி ஆச்சரியமடைந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.

மேலும் நல்ல குணத்துக்கும் மற்றவர்களை கவரக்கூடிய ஆற்றலுக்கும் வித்தியாசம் இருப்பதை ஆய்வு சுட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக நல்ல குணம் என்பது மற்றவர்களுக்கு ஏதுவாக நடந்துகொள்வது என்று பங்கேற்பாளர்கள் வகைப்படுத்தியதாக ஆய்வாளர்கள் கூறினர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்