Padel விளையாட்டு தெரியுமா? அது எவ்வாறு சிங்கப்பூரில் பிரபலமானது?
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மட்டையை வைத்து பந்தை அடிக்கும் விளையாட்டுகளில் டென்னிஸ் (tennis), பூப்பந்தாட்டம் போல் பேடலும் (Padel) ஒன்று.
பேடல் விளையாட்டு அண்மையில் உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கிறது. அது எங்கிருந்து தோன்றியது? எவ்வாறு பிரபலமடைந்தது?
பேடல் என்பது ?
பேடல் டென்னிஸ் போன்றது. ஆனால் சில வேறுபாடுகள் உள்ளன.
பெரும்பாலும் இருவர் ஓர் அணியில் சேர்ந்து விளையாடுவார்கள். ஸ்குவாஷ் (squash) விளையாட்டைப் போல மட்டையை வைத்து பந்தைச் சுவரிலிருந்து துள்ளும்படி அடித்து விளையாடுவார்கள்.
டென்னிஸில் பயன்படுத்தப்படும் பந்தைவிட பேடல் பந்து சிறியது. பேடல் உட்புறத்தில் விளையாடப்படும்.
டென்னிஸில் பந்தை மேலே வீசி அடித்து விளையாடுவார்கள். ஆனால் பேடலில் பந்தைக் கீழிருந்து வீசி அடித்து விளையாடுவார்கள்.
பேடல் எங்கே தோன்றியது?
1969ஆம் ஆண்டு மெக்சிகோவின் அகபுல்கோ (Acapulco) நகரில் ஒரு தம்பதி இந்த விளையாட்டை உருவாக்கினர். நேரத்தைச் செலவிட வழி தெரியாததால் அவர்கள் ஒரு பந்தைச் சுவரின் மீது வீசிப் பிடிக்கத் தொடங்கினர்.
அந்த விளையாட்டு மனைவிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை விளையாட ஓர் இடத்தை உருவாக்கித் தரும்படி மனைவி கணவரிடம் கேட்டார்.
ஆனால் கணவருக்கு வெளியே விளையாட விருப்பமில்லை. அதனால் அவர் உட்புற அரங்கை உருவாக்கினார்.
எவ்வாறு பிரபலமானது?
அகபுல்கோ பிரபல சுற்றுலாத் தளமாக இருந்ததால் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு பேடல் அறிமுகமானது.
பிரபல நட்சத்திரங்கள், முக்கியப் பேராளர்கள் அகபுல்கோவுக்கு வந்து இந்த விளையாட்டைக் கற்றுக்கொண்டனர். பின் அவர்கள் இதை உலகெங்கும் பிரபலமாக்கினர்.
இன்று பல காற்பந்தாட்ட நட்சத்திரங்கள் பேடலை விளையாடி அதைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். இதனால் இளையர்கள் மத்தியில் பேடல் பிரபலமடைந்திருக்கிறது.
சிங்கப்பூரில் பேடல்
சிங்கப்பூரிலும் பேடல் மிகவும் பிரபலமாகியிருக்கிறது. Play Padel, Sing Padel, Prime Padel, போன்ற பல பேடல் விளையாடும் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பேடல் விளையாடுவது சுலபம். இதனால் விளையாட்டில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் கூட இந்த விளையாட்டை விளையாடலாம் என்பது இது பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆதாரம் : Others