Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

"குழந்தைக்கு உன் முகச் சாயல் இல்லை"....புதிதாகக் குழந்தை பெற்ற தாயிடம் சொல்லக்கூடாதது

வாசிப்புநேரம் -
"நீ இன்னும் கர்ப்பமாக இருப்பது போல் இருக்கிறாய்"

"குழந்தை உன் சாயலில் இல்லை"

"குழந்தை மிகவும் சிறியதாக இருக்கிறது"

"குழந்தையின் கண்கள் சிறிதாக உள்ளன"

"பெண் குழந்தை பார்ப்பதற்கு ஆண் குழந்தையைப் போல் இருக்கிறது"


இவை புதிதாகக் குழந்தை பெற்ற தாய்மார்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள்.

இதனால் எந்த ஆபத்தும் இல்லைதான். ஆனால் எந்தவொரு தாயும் இத்தகைய விமர்சனங்களை ஒருபோதும் விரும்புவதில்லை.

ஒரு பெண், தாய் என்ற புதிய அவதாரம் எடுக்கும்போது...
  • தாய்ப்பால் கொடுக்கக் கற்றுக்கொள்கிறார்
  • கொஞ்ச கொஞ்ச நேரமே தூங்கமுடியும். அதைச் சமாளிக்கப் பழகுகிறார்
  • உடல் சோர்வை எதிர்த்துப் போராடுகிறார்
  • உடலில் ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறார்
அனைத்திற்கும் மேலாகப் பிரசவ வலியில் இருந்து முழுமையாக மீளவும் ஒரு தாய்க்கு அவகாசம் தேவைப்படுகிறது.

ஆனால் தாயையும் குழந்தையையும் நேரில் பார்க்கவருவோர் கூறும் கருத்துகள் அத்தாயின் மனத்தை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை.

இதில் மாற்றம் வேண்டாமா?

எவ்வாறான கருத்துகளைத் தவிர்க்கலாம்?
பட்டியலிட்டது CNA.

1. குழந்தையின் அழகை வருணிப்பதாக நினைத்துத் தாயின் மனத்தைப் புண்படுத்துவது
  • உதாரணத்திற்கு, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கப் போராடும் தாயிடம் குழந்தையின் உடல் எடை குறைவாய் இருப்பதாகக் கூறுவது
2. தாயின் தோற்றத்தை விமர்சிப்பது
  • உதாரணத்திற்கு, உடல் எடை கூடிவிட்டது, கண்கள் வீங்கியுள்ளன எனக் கூறுவது
  • 10 மாதங்களில் சில தாய்மார்களின் உடல் எடை 20 கிலோகிராம் வரை அதிகரித்திருக்கும். குழந்தை பிறந்தவுடனேயே அந்த எடை குறையாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
3. தேவையற்ற அறிவுரைகள் வழங்குவது
  • உதாரணத்திற்கு, குழந்தையை எவ்வாறு வளர்ப்பது எனத் தாய்க்கு பாடம் எடுப்பது
  • குழந்தைக்குத் தாய்ப்பால் நல்லதா, பால்மாவு நல்லதா? குழந்தை அழுதால் தூக்க வேண்டுமா, விட்டுவிட வேண்டுமா? என்பவை தொடர்பில் அறிவுரை கூறுவதாக நினைத்து அவர்களைக் குழப்ப வேண்டாம்
புதிய தாயையும் குழந்தையும் வரவேற்பதன் மூலம் தாயின் மன உணர்வுகளைப் பாதுகாக்கலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்