USB-C என்றால் என்ன?

Frederic J. BROWN / AFP
Apple நிறுவனம் USB-C வகை மின்னூட்டக் கம்பிவடங்களை அறிமுகம் செய்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட iPhone 15 திறன்பேசியில் அது இடம்பெறும்.
மற்ற மின்சாதனங்களிலும் USB-C உள்ளது.
USB-C வகை மின்னூட்டக் கம்பிவடங்கள் என்றால் என்ன?
தகவலை அனுப்ப, கருவிக்கு மின்னூட்ட ஒரே கம்பிவடமாக அது இருக்கும்.
Samsung, Microsoft போன்ற பல பெரிய நிறுவனங்கள் USB-C-யை ஏற்றுக்கொண்டன.
Android திறன்பேசிகள் அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.
இப்போது அந்தப் பட்டியலில் iPhone திறன்பேசியும் சேர்ந்துள்ளது.
iPhone திறன்பேசிகள் தனித்துவமான Lightning மின்னூட்டக் கருவியைப் பயன்படுத்தின.
iPhone 15 வாங்குவோர் Lightning மின்னூட்டக் கருவியைப் பயன்படுத்த இயலாது.
என்ன பயன்கள்?
- மின்சாதனங்களுக்கு வேகமாக மின்னூட்ட முடியும்
- பொதுவாகப் பயன்படுத்தப்படும் USB port-ஐ விட (கம்பிவடத்தைப் பொருத்தும் இடம்) 20 மடங்கு வேகத்தில் USB-C கம்பிவடத்தால் மின்னூட்ட முடியும்
- நீண்ட காலத்துக்கு நீடித்து வேலை செய்யும் திறனுடையது
- அதனால் அடிக்கடி புதிய கம்பிவடத்தை வாங்க வேண்டிய தேவை இருக்காது
மின்சாதனங்களின் மின்னூட்டக் கருவிகள் 2024ஆம் ஆண்டுக்குள் USB Type-C வகையாக இருக்கவேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம் அதைத் தெரிவித்தது.
ஒரே மாதிரியான மின்னூட்டக் கம்பிவடங்கள் மூலம் மின்னியல் பயன்பாட்டை எளிதாக்குவது நோக்கம்.