Skip to main content
லவ்பர்ட்ஸ்... காதலர்களுக்கு இவை சொல்லிக் கொடுக்கும் பாடம் என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

லவ்பர்ட்ஸ்... காதலர்களுக்கு இவை சொல்லிக் கொடுக்கும் பாடம் என்ன?

வாசிப்புநேரம் -
லவ்பர்ட்ஸ்... காதலர்களுக்கு இவை சொல்லிக் கொடுக்கும் பாடம் என்ன?
envato elements
லவ்பர்ட்ஸ்....

இவற்றுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்று எப்போதாவது யோசித்ததுண்டா?

வாழ்நாள் முழுதும் இணையுடன் இருப்பதால் இந்தப் பறவைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

பொதுவாகவே லவ்பர்ட்ஸ் ஒரே துணையுடன் இறுதிவரை வாழக்கூடியவை என்பது மரபணுச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துணையுடன் இணைந்து குஞ்சுகளை வளர்க்கின்றன.

ஆனால் அதே சமயத்தில் சில லவ்பர்ட்ஸ் பிற பறவைகளுடனும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

துணையின் இறகுகளைச் சுத்தப்படுத்தி லவ்பர்ட்ஸ் ஒன்றன் மீது ஒன்று வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுகின்றன.

சில பறவைகள் ஒரு நேரத்தில் எந்தத் துணையுடன் இருக்கின்றனவோ அந்தப் பறவைக்கு மட்டும் தான் உணவளிக்கும்.

ஆனால் லவ்பர்ட்ஸ் மட்டும் தான் வாழ்நாள் முழுதும் அவற்றின் துணைக்கு இரை கொடுக்கும்.

லவ்பர்ட்ஸ் துணையை இழந்ததும் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகிவிடும்.

வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்வதுடன், அவை துணையின் பிரிவை நினைத்து ஏங்குவதாகக் கூறப்படுகிறது.
ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்