வாழ்வியல் trending
65 ஆண்டுகளாக இனிப்பை அள்ளித் தரும் White Rabbit மிட்டாய்
வாசிப்புநேரம் -
படம்: Heritage SG Food/Facebook
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவின் பிரபலமான 'வைட் ரேபிட்' (White Rabbit) மிட்டாய்...
அதன் பாரம்பரிய சுவையைப் பலரும் மறந்திருக்க முடியாது.
நிறுவனத்தின் புதிய முயற்சிகளால் மீண்டும் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது "வைட் ரேபிட்".
சமீபத்தில் அதன் சிவப்பு, நீலம், வெள்ளை நிற உறை சமூக ஊடகத்தில் பிரபலமானது.
1959ஆம் ஆண்டு சீனா உருவாகி 10 ஆண்டு நிறைவடைந்ததை நினைவுகூர 'வைட் ரேபிட்' மிட்டாய் அறிமுகப்படுத்தப்பட்டது.
சீனாவின் தேசிய மிட்டாயாக அது கருதப்படுகிறது.
ஒருகாலத்தில் 7 வைட் ரேபிட் மிட்டாய்கள் ஒரு குவளை பாலுக்குச் சமம் என்றும் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
உணவுப் பற்றாக்குறை நிலவிய காலத்தில் அந்த மிட்டாய் அரிய உணவுப் பொருளாகக் கருதப்பட்டது.
1972ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் (Richard Nixon) சீனாவுக்கு வருகை தந்தபோது, அவரது குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோகிராம் வைட் ரேபிட் மிட்டாய் பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்த மிட்டாயைத் தயாரிக்கும் நிறுவனம் பாரம்பரியத்தைத் தக்கவைத்துக்கொண்டு புதிய முயற்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.
சிவப்பு, நீலம், வெள்ளை நிற உறையை மாற்றாமல், சிவப்பு பயறு, சோளம், தயிர், டூரியான் உள்ளிட்ட புதிய சுவைகளில் மிட்டாய்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதாரம் : South China Morning Post