வயதாக வயதாக... பசி ஏன் குறைகிறது?
வாசிப்புநேரம் -
படம்: envato elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வயது அதிகரிக்கும்போது முன்புபோல் அதிகமாகச் சாப்பிட முடியவில்லை என்று பலர் கூறுவார்கள்.
இதற்கு உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களே முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வயது கூடும்போது பசியைத் தூண்டும் கிரெலின் (Ghrelin) என்ற ஹார்மோனின் செயல்பாடு குறையலாம்.
அதேவேளையில் வயிறு நிறைந்துவிட்ட உணர்வைத் தரும் ஹார்மோன்கள் அதிகரிக்கலாம்.
இதனால் குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியதுபோல் இருக்கும்.
வயது அதிகரிக்கும்போது தசை அளவும் குறைகிறது.
தசைகள் அதிகக் கலோரியைப் பயன்படுத்துவதால் தசைகள் குறையும்போது உடலுக்கும் குறைவான உணவே தேவைப்படும்.
மணம், சுவையை உணரும் திறனும் வயது ஏற ஏற மங்கக்கூடும்.
இதனால் உணவின்மீது இருந்த ஆர்வமும் குறையலாம்.
தனியாகச் சாப்பிடும் பழக்கமும் பசியைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பசி அதிகரிக்க என்ன செய்யலாம்?
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது பசியைத் தூண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பாக எடைப் பயிற்சிகள் தசைகளை வலுப்படுத்திப் பசியையும் அதிகரிக்க உதவும்.
ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை சிறிய அளவில் உணவு எடுத்துக்கொள்ளலாம்.
பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், பருப்பு வகைகள், புரதம் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்க்கவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்துவது...
உணவில் மூலிகைகள், நறுமணப் பொருள்கள், எலுமிச்சைச் சாறு போன்றவற்றைச் சேர்ப்பது...
இவையெல்லாம் பசியை அதிகரிக்க உதவலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : New York Times