Skip to main content
பெண்கள்.. ஆண்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பெண்கள்.. ஆண்கள் - யார் நீண்டகாலம் வாழ்கின்றனர்?

வாசிப்புநேரம் -
பெண்கள் ஆண்களைவிட நீண்டகாலம் வாழ்கின்றனர்.

அமெரிக்காவில் பெண்களின் ஆயுள்காலம் 80 என்றும் ஆண்களின் ஆயுள்காலம் 75 என்றும் New York Times நாளேடு குறிப்பிட்டது.

ஆனால் அதில் எத்தனை ஆண்டுகள் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்?

அப்படிப் பார்க்கும்போது பெண்கள் வாழும் ஆரோக்கியமான ஆண்டுகள் ஆண்களைவிடக் குறைவு என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் உள்ள USC Leonard Davis School of Gerontology எனும் கல்விக் கழகத்தின் துணைப் பேராசிரியர் அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றித் தெரிவித்தார்.

வயதான காலத்தில் ஆண்களைவிட பெண்கள் உடலளவில் பலவீனமாக இருப்பர். குறிப்பாக மாதவிடாய் நின்றபிறகு பெண்களுக்கு மறதி நோய், இதய நோய் போன்றவை வர வாய்ப்புள்ளது.

இரு பாலினங்களுக்கும் இடையே அந்த இடைவெளிக்கான காரணங்கள்?

அவற்றில் சில..

1) மரபணு (Genetics)

-- பெண்களின் XX குரோமோசோம்கள் (chromosome) நீண்ட ஆயுளைப் பாதிக்கலாம். ஆராய்ச்சி அதனைச் சொன்னாலும் எப்படி என்று தெளிவாகத் தெரியவில்லை.

2) சுரப்பிநீர் (Hormones)

-- estrogen சுரப்பிநீருக்கும் நீண்ட ஆயுளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் விசாரிக்கின்றனர். குறிப்பாக நோய் எதிர்ப்புச்சக்தி மீது அது கொண்டிருக்கும் தாக்கம் ஆராயப்படுகிறது.

-- மாதவிடாய் நிற்பதற்கு முன் பெண்களின் நோய் எதிர்ப்புச்சக்தி நல்ல நிலையில் இருப்பதாகப் போதிய தகவல்கள் காட்டுகின்றன. ஆனால் ஆண்களின் நோய் எதிர்ப்புச்சக்தி பெண்களைவிட மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அது அவர்களுடைய ஆயுளைக் குறைக்கக்கூடும்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்