பிள்ளைகளுக்குப் பெயர் வைத்துப் பல்லாயிரம் சம்பாதிக்கும் பெண்
instagram/whatsinababyname
This audio is generated by an AI tool.
எத்தனையோ வழியில் பணம் சம்பாதிக்கலாம்...
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ (San Francisco) நகரைச் சேர்ந்த பெண் வித்தியாசமான வழியைக் கண்டார்.
குழந்தைக்குப் பெயர் வைப்பதன் வழி...
அவர் ஒவ்வொரு முறை பெயர் வைப்பதற்கும் 30,000 டாலர் வரை (38,700 வெள்ளி) வசூலிப்பதாக San Francisco Chronicle ஊடகம் சொன்னது.
பெயர்ப் பரிந்துரைகள் அடங்கிய மின்னஞ்சல் என்றால் 200 டாலர்...
அதே வம்சத்தில் முன்னர் இடம்பெற்ற பெயர்களை விசாரித்துப் பரிந்துரைக்கவேண்டும் என்றால் 10,000 டாலருக்கு மேல் ஆகும்...
37 வயது டெய்லர் A ஹம்ஃப்ரி (Taylor A. Humphrey) அவ்வாறு 500 குழந்தைகளுக்குப் பெயர் வைத்துள்ளார்.
குழந்தைகளுக்குப் பெயர் வைத்துச் சம்பாதிக்கவேண்டும் என்று அவர் தொடக்கத்தில் எண்ணவில்லை.
வெறும் ஆர்வத்தைக் கொண்ட ஹம்ஃப்ரி Instagramஇல் ஒரு பக்கத்தைத் தொடங்கினார்.
அது மெல்ல மெல்லப் பிரபலமானதில் சிலர் பெயர் வைப்பதற்கு உதவி கேட்கத் தொடங்கினர்.
ஹம்ஃப்ரி அதை வியாபாரமாக மாற்ற எண்ணியதாக San Francisco Chronicles சொன்னது.
"முன்னர் மனத்தில் தோன்றும் பெயரைக் குழந்தைகளுக்கு வைத்துவிடுவார்கள்... இப்போது இணையம் உள்ளது. பல தெரிவுகள் உள்ளன. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது மிகவும் சிரமமாகிவிட்டது," என்றார் ஹம்ஃப்ரி.
அத்தகைய சவாலைச் சந்திப்போருக்கு உதவுவதாக அவர் சொன்னார்.
பணக்காரர்களும் பிரமுகர்களும் அவரின் சேவையை நாடுவதாக ஹம்ஃப்ரி கூறினார்.