Skip to main content
காதலுக்காக விளம்பரம்... எங்கே?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

காதலுக்காக விளம்பரம்... எங்கே?

வாசிப்புநேரம் -

காதலிக்க ஆசை...
பல ஆண்களைச் சந்தித்தார்.

ஆனால் எவருமே மனத்தைக் கவரவில்லை.

எனவே விளம்பரப் பலகை (billboard) ஒன்றை வாடகைக்கு எடுத்து விளம்பரம் செய்துள்ளார் அமெரிக்கப் பெண் ஒருவர்.

42 வயதாகும் லிசா கட்டலானோ (Lisa Catalano) விளம்பரத்தில் அவரது நிழற்படத்தையும் இணையப்பக்க முகவரியையும் பதிவிட்டுள்ளார்.

அவரைச் சந்திக்க விரும்பும் ஆண்கள் அவரது இணையப்பக்கத்தின் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

பல ஆண்களைச் சந்தித்தும் எவர் மீதும் காதல் ஏற்படவில்லை என்ற வருத்தத்தில் விளையாட்டாக விளம்பரம் செய்ததாய் கூறுகிறார் லிசா.

அவரது வித்தியாசமான அணுகுமுறை பலரது கவனத்தை ஈர்த்தது.

இதுவரை 3,800 விண்ணப்பங்களையும் 8,200 குறுஞ்செய்திகளையும் பெற்றதாக அவர் சொன்னார். 

இத்தனை பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

இணையவாசிகளும் அவரது முயற்சி குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

சிலர் அவரது துணிச்சலைப் பாராட்டினர். வேறு சிலர் அவரது செயலைக் குறைகூறினர்.

விளம்பரத்துக்காக எவ்வளவு செலவு செய்தார் என்பதைக் கூற மறுத்த லிசா "உண்மைக் காதலைத் தேட பணம் ஒரு தடையாகாது" எனக் கூறினார்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்