Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

துப்புரவாளராக இருந்த மருத்துவமனையில் மருத்துவராகச் சேரும் பெண்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துப்புரவாளராகப் பணிபுரிந்த அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியவுள்ளார் ஷே டெய்லர்-ஆலன் (Shay Taylor-Allen).

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது தாயார் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

அப்போது அவருக்கு வயது 18.

யேல் மருத்துவப் பள்ளியின் மருத்துவமனையில் (Yale School of Medicine) துப்புரவுப் பணியாளராக டெய்லர் பணிபுரிந்தார்.

அங்குதான் அவர் பிறந்தார் என்றும் ABC ஊடகம் குறிப்பிட்டது.

துப்புரவாளராக வேலை செய்தபோது டெய்லர் தனது கதையை அப்போதைய மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியிடம் பகிர்ந்துகொண்டார்.

அந்த அதிகாரி அளித்த ஆதரவு தம்முடைய குடும்பத்திற்குக் கணிசமாக உதவியதாக டெய்லர் கூறினார்.

மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்கவும் மற்றவர்களுக்காகக் குரல் கொடுக்கவும் அதிகாரியிடம் பேசிய அனுபவம் ஊக்குவித்ததாக அவர் சொன்னார்.

மருத்துவப் படிப்பை முடிக்கப்போகும் அவருக்கு யேல் மருத்துவமனையிலேயே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (Howard University College of Medicine)படிக்கும் 32 வயதான அவர் தமது அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் இணையம்வழி பகிர்ந்தார்.

அந்தக் காணொளி அதிவிரைவில் பகிரப்பட்டது.

3.7 மில்லியனுக்கும் அதிகமானோர் காணொளியைப் பார்வையிட்டனர்.

டெய்லர் மே மாதம் பட்டம் பெறுவார்.

யேல் Anesthesiology Residency துறையில் பயிற்சி மருத்துவராகச் சேர்வார்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்